(இரா.செல்வராஜா)

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து செயல் திட்ட அறிக்கையொன்றை சமர்பிப்பதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி தேவராஜ் தலைமையில் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இக்குழுவில் மலையகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளேன்.இக்குழுவினர் பல்கலைக்கழகம் அமைய வேண்டிய இடம் தேவையான வளங்கள் மற்றும் ஏளைய தேவைகள் குறித்து செயற்திட்ட அறிக்கையை சமர்பிப்பார்கள்.

குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , உயர்கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்த கவலை தெரிவித்தார்.