ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்­துள்­ளது. நாங்கள் வாக்­க­ளித்­தாலும், வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் ஜனா­தி­பதி என்­பவர் அனை­வ­ருக்கும் பொது­வா­ன­வரே. எனவே இந்த நாட்டு மக்கள் அனை­வ­ரையும் பாது­காக்க வேண்­டிய பொறுப்பு அவ­ருக்கு இருக்­கின்­றது. அதனை அவர் சரி­யாக செய்வார் என நான் எதிர்­பார்க்­கின்றேன் என மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர்  இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தேர்தல் காலத்தின் போது பல்­வேறு பிரி­வு­க­ளாக பிரிந்து அர­சி­யல்­வா­தி­களும் நாட்டு மக்­களும் செயல்­ப­டு­வார்கள்.  எந்த தேர்தல் வந்­தாலும் இது பொது­வான விடயம். ஒரு ஜன­நா­யக நாட்டில் மக்கள் தங்­க­ளுக்கு விரும்­பி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க முடியும்.

தேர்­தலின் பின்பு தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் இவர்கள் அனை­வரும் நாட்டில் அனை­வ­ருக்­குமே பொது­வாக சேவை செய்ய வேண்டும். அதுவே ஜன­நா­ய­கத்­தி­னு­டைய பண்பு.

தேர்தல் காலங்­களில் ஒரு­வரை ஒருவர் விமர்­சிப்­பது, கருத்து தெரி­விப்­பது நடை­மு­றையே. எல்லா நாடு­க­ளிலும் இந்த நடை­மு­றையே இருக்­கின்­றது. தேர்­தலின் பின்பு அனை­வரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது எல்­லோ­ரு­டைய பொறுப்­புமாகும்.

இந்த புதிய அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் அனைத்து நல்ல நட­வ­டிக்­கை­க­ளுக்கும் நாங்கள் முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்க தயா­ராக இருக்­கின்றோம்.

எங்­களைப் பொறுத்­த­ளவில் எங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு நல்­லது நடக்க வேண்டும் என்­பது எங்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு. அதனை யார் செய்­தாலும் ஒத்­து­ழைப்பு வழங்க தயா­ராக இருக்­கின்றோம். நாங்கள் நல்ல வேலைகள் செய்யும் பொழுது காலை பிடித்து இழுப்­பதோ, முட்டு கட்டை போடு­வதோ தேவை­யற்ற விமர்­ச­னங்­களை கூறு­வதோ எங்­க­ளு­டைய வேலை அல்ல.

அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்கி எங்கள் மக்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய அனைத்­தையும் பெற்­றுக்­கொ­டுப்­ப ேத எங்­க­ளு­டைய கட­மை­யாகும்.

மலை­யக மக்­களை பொறுத்­த­வை­ரயில் அவர்­க­ளு­டைய சம்­பள பிரச்­சினை, வீட்டு பிரச்­சினை, காணிப் பிரச்­சினை, கல்வி, சுகா­தாரம் உட்­பட ஏனைய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். எங்­க­ளு­டைய காலத்தில் நாங்கள் கூடு­மானவரை அவற்றை நிவர்த்தி செய்வதற்காக எங்களை அர்ப்பணித்து வேலை செய்தோம். அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு இந்த மக்கள் சுபிட்சமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.