பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நிதியமைச்சருக்கான தனது கடமைகளை நிதியமைச்சில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சராக கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.