அரச திணைக்களங்களில் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தையும், மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு திறைசேரியின் செயலாளர் சஜித் ஆட்டிக்கலவால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   இது தொடர்பிலான அறிவித்தல்,  சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும், அரசியலமைப்புப் பேரவைக்கும், DMC/Policy/Requeriments என்ற கடிதத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

   2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அனைத்து நியமனங்களும், மீளவும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் வரை அவற்றை  இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது என்றும்,  அந்தக் கடிதத்தில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.