நல்ல சுமூகமாக அரசியல் சூழல் உருவாகுவதற்கு மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடைசெய்யவேண்டும்  என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மதத்தலைவர்கள்  ஆன்மீக ரீதியில் மக்களை நெறிப்படுத்த வேண்டியவர்கள் அவர்கள் மக்களிடையே விரோதங்களை விதைத்து அரசியல்  செய்யமுற்படுவது இன்று பாரிய  பிரச்சனையாக உள்ளது. அந்த வகையில் அத்துரலிய ரத்தின தேரர் பாராளுமன்றத்துக்குள் செயற்படும் விதம் புத்த மதத்திற்கு இழுக்காக காணப்படுகிறது இன்று ஒரு கட்சியிலும் நாளை ஒரு கட்சியிலும் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக ஒரு நிலைப்பாட்டை எடுத்து வரும்  செயற்பாடுகள் அந்த மதத்திற்கே  இழுக்காக காணப்படுகிறது.

எனவே  மத ரீதியில் மக்களை பிரித்து தங்களது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள புறப்படும் இப்படியான மதத்தலைவர்களால்  நாட்டின் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கப்படுகிறது

நல்லினக்கத்திற்க விரோதம் விளைவிக்கப்படுகிறது இந்த வகையில் மிகிந்தலை ரஜமகாவிகாராதிபதியின் கருத்து வரவேற்கத்தக்கது அதாவது மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவது அரசியல் கருத்தை கூறி மக்களை திசை திருப்புவது  போன்றவை  தவிர்க்கப்பட்டால் இன மத நல்லினக்கத்திற்கு உந்து சக்தியாக அமையும் என்பதுதான் அவரின் கருத்து அதையும் மீறி இன்று அரசியல் வங்குரோத்தில் உள்ளவர்களாதான் மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படுவது ஒரு நகைப்பிற்குரிய விடயமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாது  அரசியலின் நன்மை தீமைகளை அனுபவிக்கப்போகிறவர்கள் மக்கள்  அதனால் மக்களின் கருத்துக்கள் சுய விருப்பங்கள்  கவனத்தில் எடுக்கப்படவேண்டி ஒன்று ஆனால் ஒரு சில மதத்தலைவர்கள் அப்படி  அல்ல   தனக்கும் தனது சுற்றத்தாருக்கும் சாதகமாக ஒருவர்  வெறும் மதத்தின் மீது பற்று கொண்டிருந்தால் அவரை  தேர்தலில் நிறுத்தி  அவரை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களை வற்புறுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது மக்கள் சுதந்திரமாக சிந்திக்க கூடியவர்கள்   

இந்த நாட்டையும் பிரதேசங்களையும் யார் நிர்வகிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை பொது மக்களுக்கே உரித்தானது அதில்  எவ்வகையிலும்  மதத்தலைவர்கள் ஈடுபடக்கூடாது என்னுடைய கருத்து அப்பொழுதுதான்  அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் சூழல் அமையும் நல்ல திறமையும் சாதுரியமும் மிக்க அரசியல் சூழலை உருவாக்க முடியும் என்று வன்னி பாராளு மன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்