மலேசியாவில் சுமத்ரான் வகை காண்டாமிருகம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவின் போர்னியா தீவில் வசித்துவந்த இமான் என்ற 25 வயது நிரம்பிய பெண் காண்டாமிருகம் புற்றுநோயால் உயிரிழந்தது. இதேபோல் கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகம் சபா கடந்த மே மாதம் இறந்தது. 

எனவே தங்கள் நாட்டில் சுமத்ரான் வகை காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக மலேசியா அரசு அறிவித்துள்ளது.

இவற்றை இனப்பெருக்கம் செய்ய இதுவரை எடுக்கப்பட்ட பல முயற்சியும் பலனில்லாமல் போனது, என மலேசிய அரசு கூறியுள்ளது.

ஒரு காலத்தில் ஆசிய கண்டம் முழுவதும் பரவலாக காணப்பட்ட சுமத்ரான் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது.

தற்போது வெறும் 80 காண்டாமிருகங்கள் மட்டுமே வாழ்வதாகவும் இந்தோனேஷியாவில் அவை இருப்பதாகவும் கூறப்படுகிறiமை குறிப்பிடத்தக்கது.