ரிஷாத்தின் வாகனம் மீது கல்வீச்சு!

Published By: Vishnu

24 Nov, 2019 | 09:28 PM
image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் மாத்திரம் ஐ.தே.மு அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில், குறித்த தேர்தலில் ஐ.தே.மு வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மதுரங்குளி கணமூலை பகுதிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அ.இ.ம.கா புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ரஹீம் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

இதன்போது கணமூலை பிரதேசத்தில் ௯டியிருந்த சிலர் , முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனப் பேரணி மீது தாக்குதல் நடத்தியதுடன், அவரின் வருகையை எதிர்த்து வீதியில் டயர்களையும் எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பயணித்த வாகனத் தொடரணி வாகனம் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-27 09:20:40
news-image

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா...

2025-03-27 09:41:50
news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53