வவுனியா ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுவரும் இம் மாணவி மாலைநேர வகுப்புக்கு பாடசாலைக்கு வந்து செல்கையிலேயே தேனீர்க்கடைக்காரரான  54 வயதுடைய குறித்த சந்தேக நபர்  துஷ்பிரயோகத்தை புரிந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு நாட்களாக சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமி தெரிவித்துள்ள நிலையில் தற்போது சிகிச்சைக்காக சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.