அடம்பன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் காரில் இரண்டு ஆடுகளை கடத்திச் சென்ற மூன்று இளைஞர்களை அடம்பன் பொலிஸார் நேற்று சனிக்கிழமை (23) மாலை  6.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் கார் ஒன்றில் தொடர்ச்சியாக கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக அடம்பன் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் அடம்பன் பொலிஸார் தொடர் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று  சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அடம்பன் பருப்புக்கடந்தான் பகுதியில் வைத்து குறித்த காரை மறித்த அடம்பன் பொலிஸார் சோதனைக்கு உற்படுத்தினர்.

இதன் போது அந்த காரின் பின் பகுதியில் வாய் கட்டப்பட்ட நிலையில் இரண்டு ஆடுகள் மீட்கப்பட்டதோடு, குறித்த காரில் பயணித்த 3 இளைஞர்களையும் அடம்பன் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த இளைஞர்கள் 22 மற்றும் 24 வயதுடைய அடம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும்,குறித்த சொகுசு காரின் சாரதியாக காணப்பட்டவர் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர் எனவும்,அவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 3 இளைஞர்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதோடு,மீட்கப்பட்ட ஆடுகள் மற்றும் சொகுசு கார் என்பன அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.