(செ.தேன்மொழி)

இரத்தினப்புரி - வேவல்வத்தை பகுதியில் 16.5 கிராம் போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேவல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்துர பகுதியில் நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வேவல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரும் ,களனி பகுதியைச் சேர்ந்த 30-35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் , ஹசீஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வேவல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமிந்தகுமாரவின் தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.