பன்றிகள் கூட்டத்தினால் ஏற்பட்ட விபரீதம் - 60 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி

Published By: Digital Desk 4

24 Nov, 2019 | 03:47 PM
image

பலாங்கொடை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு மரக்கறிகள் ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதியில் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் வைத்து, குறித்த சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 5.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொகவந்தலாவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் பன்றிகள் கூட்டமாக பிரதான வீதியில் குறுக்கே சென்றமையினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியின் இருந்த பெறுமதியான மரக்கறி வகைகள் சேதமமைந்துள்ளதாகவும், எனினும் சில மரக்கறி வகைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04