ராகதேவி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்கும் படம் “தகடு“
இந்த படத்தில் பிரபா மற்றும் அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். மற்றும் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, அவன் இவன் ராமராஜன், ஆர்.தீபக் ராஜ், மிப்பு, ராம் கிரண், பிரியங்கா சுக்லா, ஹாசிகா, ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - எஸ்.கார்த்திகேயன் / இசை - சார்லஸ் மெல்வின்.எம்
பாடல்கள் - இளைய கம்பன் / எடிட்டிங் - சுரேஷ் அர்ஷ்
கலை - வி.சிவகுமார் / ஸ்டன்ட் - சூப்பர் குட் ஜீவா
நடனம் - அஜய் சிவசங்கர், ராக் சங்கர்
தயாரிப்பு - ராகதேவி புரொடக்ஷன்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.தங்கதுரை
படம் பற்றி இயக்குனர் எம்.தங்கதுரையிடம் கேட்டோம்...
தனது பேராசையால் உலகையே அடைய நினைத்த பல மன்னர்களின் கதை உண்டு. ஆனால் பேராசை கொண்ட மன்னர்கள் தான் மண்ணோடு மண்ணாக போனார்களே ஒழிய, இன்றுவரை அந்த பேராசை என்னும் பெரும் பேய் ஏதோ ஒரு வடிவில் அழியாமல் உலாவி கொண்டு தான் இருக்கிறது. அப்படி பேராசை கொண்ட ஒருவனோடு பயணிக்கும் கல்லூரி மாணவர்களின் ஒரு அசாத்தியமான பயணம் தான் இந்த தகடு.
கல்லூரியில் வரலாறு பாடம் படிக்கும் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் பாடத்தில் வரும் ஒரு வரலாறு சம்மந்த பட்ட ஒரு இடத்தை தேடி போகிறார்கள் அப்போது அவர்கள் தேடி போனது இல்லமால் முக்கியமான ஒன்றை பார்கிறார்கள் அது என்ன அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தான் படத்தின் திரைக்கதை.
இந்த படத்திற்காக ஆந்திராவில் உள்ள கங்குந்தி கோட்டை என்ற கோட்டையில் முதன் முறையாக படிப்பிடிப்பு நடத்தினோம். அங்கு யாரும் இதுவரை படிப்பிடிப்பு நடத்தியது கிடையாது. அந்த இடத்திற்கு போகவேண்டும் என்றால் காரில் போக முடியாது. கிட்ட தட்ட நான்கு கிலோ மீட்டார் நடந்து செல்லவேண்டும் அப்படி கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம் மேலும் கிருஷ்ணகிரி, ஒக்கேனக்கல், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது என்றார் இயக்குனர்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM