இணக்கப்பாட்டின் அவசியம்

24 Nov, 2019 | 03:36 PM
image

இலங்கை இன ரீதி­யாக இரு முனை­களில் கூர்மையடைந்­தி­ருக்­கின்­றது. இந்தக் கூர்­மையின் வெளிப்­பா­டா­கவே நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் அமைந்­துள்­ளது. அதில் வெற்றி பெற்­றுள்ள ஜனா­தி­பதி கோத்தபாய ராஜபக் ஷ சிங்­கள மக்­களின் ஏக­போக தலை­வ­ராகத் தலை­நி­மிர்த்­தி­யுள்ளார்.

மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு அடுத்­த­தாக ராஜபக் ஷ குடும்பம் இந்தத் தேர்­தலில் மீண்டும் ஜனா­தி­பதி பத­வியைத் தன்­னு­டை­மை­யாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. தேசிய அளவில் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யாக அல்­லாமல் மிக மிகப் பெரு­ம­ளவில் சிங்­கள பௌத்த மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அரச தலை­வ­ராக, தேசிய மட்­டத்­தி­லான ஓர் அர­சியல் தலை­வ­ராக அவர் தேர்வு பெற்­றி­ருக்­கின்றார்.

இந்த ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் குறித்த தேச வரை­ப­டத்தில் நிறந்­தீட்டி, ஜனா­தி­பதி கோத்தாப­ய­வுக்கு எங்­கெங்கு வாக்­குகள் கிடைத்­தி­ருக்­கின்­றன, எங்­கெங்கு அவரை எதிர்த்துப் போட்­டி­யிட்ட சஜித் பி­ரே­ம­தா­ச­வுக்கு மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்ற தேசப்­படம் ஒன்று வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது. தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்­தபாய ராஜ­பக் ஷவை இந்தத் தேர்­தலில் ஆத­ரித்து வாக்­க­ளிக்­க­வில்லை என்­பது தேர்தல் பெறு­பே­று­களின் முடி­வு­.

இந்த வாக்­க­ளிப்பு வெளிப்­பாட்டுத் தேசப்­ப­டத்தில் அதில் ஜனா­தி­பதி கோத்தாப­யவுக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கப்­பட்ட பிர­தேசம் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் தனி­நா­டா­கிய தமி­ழீழ வடி­வத்தை ஒத்­த­தாகக் காட்­டப்­பட்­டி­ருந்­தது. இது ஒரு குறி­யீ­டாகக் காட்­டப்­பட்­டி­ருந்த போதிலும், அது தீவி­ர­மான ஓர் அர­சியல் கருத்தை வெளிப்­ப­டுத்தி இருந்­தது.

பூகோள ரீதி­யாக விடு­த­லைப்­பு­லிகள் தமது கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்தைத் தொடர்ச்­சி­யாகத் தக்­க­வைத்­தி­ருந்­ததன் மூலம் யுத்த மோதல்­க­ளின்­போது நாடு பிள­வு­பட்­டி­ருந்­தது. ஆனால் யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, பூகோள ரீதி­யான இந்தப் பிளவு இல்­லாமல் செய்­யப்­பட்­டது.

ஆனால் யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்­களின் பின்னர் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் அக நிலை அர­சி­யலில் நாட்டு மக்கள் இன ரீதி­யாகப் பிள­வுண்டு கிடப்­பது பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கி­ய­தை­ய­டுத்து, சிறு­பான்மை இன மக்கள் இன­வாதப் போக்கில் வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள் என்­றொரு குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் உறு­தி­யாக மறுத்­தி­ருந்­தனர். அது தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­களில் இந்த விடயம் தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டப்­பட்டு, தமிழ்மக்கள் கோத்­தபாய ராஜ­பக் ஷ­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்­லையே தவிர இன­வாதப் போக்கில் தமிழ் வேட்­பாளர் ஒரு­வ­ருக்குத் தங்­க­ளு­டைய வாக்­கு­களை அவர்கள் அளிக்­க­வில்லை என்­பதைத் தெளி­வு­ப­டுத்தி இருந்­தனர்.

சிறு­பான்மை இன மக்கள் கோத்தாபயவை எதிர்த்துப் போட்­டி­யிட்ட புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரா­ன சஜித் பிரே­ம­தா­சவையே ஆத­ரித்து வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இன­வாத ரீதியில் அல்­லது விடு­த­லைப்­பு­லி­களின் நோக்­கி­லான போக்கில் வாக்­க­ளிக்­கப்­பட்­ட­தாக இதனைக் கரு­தினால், சஜித் பிரே­ம­தாச யார் என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கின்­றது. இன­வாத ரீதியில் புலி­களின் போக்கில் வாக்­க­ளித்­தி­ருந்தால், சஜித் பிரே­ம­தாச புலி­களின் கொள்­கையைக் கொண்­ட­வரா என்ற கேள்வி உர­மாக எழு­கின்­றது.

உண்­மையில் கோத்தாபய ராஜ­பக் ஷவைப் போன்று சஜித் பிரே­ம­தா­சவும் ஒரு பௌத்த சிங்­க­ள­வரே. நாடு பிரி­வ­டை­வதை அவரும் விரும்­ப­வில்லை. விடு­த­லைப்­பு­லி­களை கொள்­கை­ய­ளவில் ஏற்­காத ஒரு­வரே என்­பதை எவரும் மறுக்க முடி­யாது.

சிறு­பான்மை இனமக்கள் குறிப்­பாகத் தமிழ்மக்கள் இந்த நாட்டின் பெரும்­பான்மை இன மக்­க­ளா­கிய சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து ஐக்­கி­ய­மா­கவும் கண்­ணி­ய­மா­கவும் வாழவே விரும்­பு­கின்­றனர். அதுவே அவர்­களின் அர­சியல் உள்­ளக்­கி­டக்­கை.­

ஆனால் பேரி­ன­வா­திகள் அவர்­க­ளு­டைய உண்­மை­யான அர­சியல் வேட்­கையை உணர மறுத்­துள்­ளார்கள். அவர்­களை இரண்டாம் நிலை குடி­மக்­க­ளாக வைத்­தி­ருக்க வேண்டும் என்ற இன­வாத சிந்­த­னை­யிலும் பௌத்த மத­வாத சிந்­த­னை­யிலும் ஊறிப்­போ­யுள்­ளார்கள். இதன் கார­ண­மா­கவே தமிழ் மக்­களின் அர­சியல் உரிமை சார்ந்த இனப்­பி­ரச்­சினை தீர்வு காணப்­ப­டாமல் காலம் தள்ளிப் போய்க்­கொண்­டி­ருக்­கின்­றது. அந்தப் பிரச்­சி­னையும் புரை­யோடிப் போயுள்­ளது.

தமிழ்மக்­களின் அர­சியல் உரி­மைக்­குரல் ஓங்கி ஒலிக்­கும்­போதும், அந்த உரி­மைக்­கான அவர்­க­ளு­டைய அர­சியல் செயற்­பாடும் உரம் ­பெ­றும்­போதும், சிங்­களப் பேரி­ன­வாதம் எழுச்சி கொண்­டெ­ழுந்து வன்­மு­றை­களின் மூல­மா­கவும் இன ரீதி­யான அடக்­கு­முறை வழி­களின் ஊடா­கவும் அவற்றைத் தணிக்கச் செய்­வதை வாடிக்­கை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதுவே இனப்­பி­ரச்­சி­னையின் பின்­புல அர­சியல் வர­லாறு.

சாத்­வீகப் போராட்­டங்கள் தோல்­வி­ய­டைந்து பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ச்­சி­யாக முறி­ய­டிக்­கப்­பட்ட பின்­ன­ணி­யி­லேயே வட்­டுக்­கோட்டை மாநாட்டில் தனி­நாட்டுப் போராட்­டத்­துக்­கான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது. தொடர்ந்து 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் தமிழ்மக்கள் தனி­நாட்டுத் தீர்­மா­னத்­துக்கு ஏக­ம­ன­தான ஆணையை வழங்­கி­னார்கள். தமிழர் விடு­தலைக் கூட்­டணி வடக்­கிலும் கிழக்­கிலும் அமோக வெற்றி ஈட்­டி­யது.

இணைந்து வாழ்­வ­தற்­கான அர­சியல் கோரிக்­கை­ சார்ந்த அர­சியல் உரி­மைக்­கான சாத்­வீகப் போராட்­டத்தை அடக்கி ஒடுக்­கு­வ­தையும், அக்­க­றை­யற்ற போக்கை வெளிப்­ப­டுத்தி உதா­சீனம் செய்­வ­தையும் தமிழ் மக்­களின் போராட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்­கான வியூ­க­மாக பேரி­னவா­திகள் பயன்­ப­டுத்­தி­னார்கள். ஆயினும் அந்த வியூ­கத்­தையும் மேவி தனி­நாட்டுக் கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டதை பேரி­னவா­தி­க­ளால் சகித்துக் கொள்ள முடி­ய­வில்லை.

அது மௌன அர­சியல் ஆத்­தி­ர­மாக அவர்­க­ளு­டைய மனங்­களில்  கனன்­று­கொண்­டி­ருந்­தது. அந்தத் தரு­ணத்­தி­லேயே மாவட்ட சபை­களின் ஊடாக அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளித்து பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­டது. தனி­நாட்டுக் கோரி­க்­கையை முன்­வைத்­தி­ருந்த தமிழ்த்­த­லை­வர்கள் நிர்ப்­பந்தம் கார­ண­மா­கவோ அல்­லது அவர்­க­ளுக்கு மட்­டுமே தெரிந்த அர­சியில் கார­ணங்­க­ளினால் மாவட்ட சபை முறை­மைக்கு இணக்கம் தெரி­வித்து அதற்­கான தேர்­தலில் குதித்­தி­ருந்­தனர்.

ஆனால் 1977ஆம் ஆண்டு தேர்­தலில் தனிச்­சக்­தி­யாகத் திகழ்ந்த தமிழ்மக்கள் மத்­தியில் தென்­னி­லங்கை அர­சியல் கட்­சி­களை ஊடு­ருவச் செய்து, வடக்­கிலும் கிழக்­கிலும் பேரின அர­சி­யல்­வா­திகள் கால் பதிக்க முற்­பட்­டார்கள். ஆனால் 1981 ஆம் ஆண்டு நடை­பெற்ற மாவட்ட சபைத் தேர்­தல்­களில் பேரின அர­சி­யல்­வா­தி­களின் நோக்கம் நிறை­வே­ற­வில்லை.

தமிழ் மக்கள் மத்­தியில் அர­சியல் ரீதி­யாகக் கால் ஊன்­று­வ­தற்­கான தங்­க­ளு­டைய அரச தந்­திரம் பலிக்­காமல் போன­தை­ய­டுத்து. அவர்கள் சீற்றம் கொண்­டார்கள். அந்தச் சீற்­றத்தின் வெளிப்­பா­டாக வெடித்த வன்­மு­றை­க­ளி­லேயே யாழ். நூலகம் எரி­யூட்­டப்­பட்டது. யாழ் நக­ரப்­ப­குதி சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்டது. ஆனாலும் அவர்­க­ளு­டைய அர­சியல் சீற்றம் அடங்­க­வில்லை.

யாழ்.நகர வன்­மு­றை­களின் மூலம் தமிழ் மக்­களின் அறி­வியல் கலா­சாரச்

சின்னம் அழிக்­கப்­பட்ட  வழி­மு­றைக் குப் பதி­லாகத் தமிழ் மக்­களின் வாழ்க்­கைக்கு ஆதா­ர­மா­கவும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் முக்­கிய பங்­க­ளிப்­பையும் செய்­தி­ருந்த தமிழ்மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை இலக்கு வைத்து 1983 கறுப்பு ஜூலை வன்­முறை நாட­ளா­விய ரீதியில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டது. அக்­கா­லப்­ப­கு­தியில் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாகத் தாக்­கு­தல்­களைத் தொடுத்­தி­ருந்த தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்­டத்தின் ஒரு நட­வ­டிக்­கை­யாக யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் 13  இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்ட இரா­ணுவ வாகனத் தொட­ரணி மீதான கண்­ணி­வெடி மற்றும் துப்­பாக்கிச் சமர் தாக்­குதல் 1983 ஜூலை வன்­மு­றைக்குப் பெரும் தூண்­டு­கோ­லாக அமைந்­தது­.

அரச படை­க­ளுக்கும் அர­சுக்கும் எதி­ராக ஆயுதப் போராட்­டத்தைத் தொடுத்­தி­ருந்த புலிகள் பௌத்த பிக்­கு­க­ளையும் சிங்­கள மக்­க­ளையும் தாக்

­கி­னார்கள், தாக்க வரு­கின்­றார்கள் என்ற வதந்­தியைக் காட்டுத் தீபோல பரவச் செய்து கறுப்பு ஜூலை வன்­மு­றையை ஓர் இன அழிப்பு நட­வ­டிக்­கை­யா­கவே அப்­போ­தைய அர­சாங்கம் கன­கச்­சி­த­மாக முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

நாட்டின் தென்­ப­கு­தியில் சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுடன் அந்­நி­யோன்­னி­ய­மாக வாழ்ந்த தமிழ்மக்கள் தமது உடை­மை­க­ளையும் வாழ்­வா­தா­ரத்­துக்­கான பொரு­ளா­தா­ரத்­தையும் இழந்து வெறும் கையுடன் வடக்கு நோக்­கியும் தமி­ழ­கத்தை நோக்­கியும் விரட்­டப்­பட்­டார்கள். இதன் பின்னர் மேலும் தீவி­ர­ம­டைந்த ஆயுதப் போராட்டம் தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான கோரிக்­கையை சர்­வ­தேச அளவில் பூதா­க­ர­மாக்கி இருந்­தது.

அந்த அர­சியல் போராட்­டத்தை சகிக்க முடி­யாத நிலை­யி­லேயே அதனைப் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரித்து அதீத இரா­ணுவ பலப்­பி­ர­யோ­கத்தில் மிக மோச­மான முப்­ப­டை­களும் சங்­க­மித்­தி­ருந்த  இரா­ணுவ நட­வ­டிக்­கையின் மூலம் 2009ஆம் ஆண்டு யுத்­தத்­திற்கு மஹிந்த ராஜ­பக் ஷ முடிவு கண்­டி­ருந்தார்.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனக்­கா­யங்­க­ளையும் அர­சியல் ரீதி­யாக ஏற்­பட்­டி­ருந்த தோல்வி நிலை­யி­லான மனப்­புண்­ணையும் ஆற்றி ஆசு­வா­சப்­ப­டுத்தி அவர்­களைத் தனது பங்­கா­ளி­க­ளாக்கி நாட்டை முன்­னேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் மஹிந்த ராஜ­பக் ஷ ஈடு­ப­ட­வில்லை.

மாறாக 1977ஆம் ஆண்டு தேர்­தலில் எழுச்சி பெற்­றி­ருந்த தமிழ்த் தரப்பு அர­சியல் அலையை வடியச் செய்து தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் 1981 ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்­தல்­களின் ஊடாகக் கால் பதிக்க முயன்­றதைப் போன்று மஹிந்த ராஜ­பக் ஷவும் வடக்­கிலும் கிழக்­கிலும் அர­சியல் ரீதி­யாகக் கால் பதிக்க முற்­பட்­டி­ருந்தார்.

இரா­ணுவமய­மான ஒரு சூழலில் மேற் ­கொள்­ளப்­பட்­டி­ருந்த இந்த முயற்­சிக்கு 2010ஆம் ஆண்டு தமிழ் மக்கள் இடம்­கொ­டுக்­க­வில்லை. அதே­போன்று 2015ஆம் ஆண்­டிலும் மஹிந்த ராஜ­பக் ஷவின் அர­சியல் எண்­ணங்­களை ஈடேறச் செய்ய தமிழ் மக்கள் வழி­வி­ட­வில்லை. அதனால் மஹிந்த ராஜ­பக் ஷ எதிர்­பா­ராத வகை யில் மோச­மா­னதோர் அர­சியல் தோல்­வியை எதிர்­கொண்டார்.

அன்­றைய ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன யுத்த வீர­னா­கவும், சிங்­கள மக்­களின் தேசிய மட்­டத்­தி­லான கதா­நா­ய­க­னா­கவும் திகழ்ந்த மஹிந்த ராஜ­பக் ஷ இந்தத் தோல்­வி­யினால் துவண்டு

போனார். இருப்­பினும் அவர் சோர்ந்து போக­வில்லை.

இன ரீதி­யாக எழுச்சி கொண்­டி­ருப்­ப­தாகத் தமிழ்மக்­களை நோக்­கிய மஹிந்த ராஜ­பக் ஷ அடி­மட்­டத்தில் இருந்து அப்­போது ஆரம்­பித்த இன­வாத அர­சியல் பிர­சாரச் செயற்­பாட்டின் விளை­வா­கவே வர­லாறு காணாத வகையில் அர­சியல் பின்­புலம் எது­வு­மற்ற,  இரா­ணுவ பின்­ன­ணியைக் கொண்ட கோத்­தபாய ராஜ­பக் ஷ இந்தத் தேர்­தலில் வெற்றி பெற முடிந்­தது.

தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு இல்­லா­ம­லேயே ஜனா­தி­பதி தேர்­தலில் வர­லாறு படைக்கும் வகையில் அவர் அமோக வெற்றி பெற்­றுள்ளார். மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக மஹிந்த ராஜபக் ஷ குழு­வினர் இன­வாதப் பிர­சா­ரத்­தையே முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். உண்­மை­யா­கவே தமிழ்மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­காக அவர்­களின் குறைநிறை­க­ளுக்கும், பிரச்­சி­னை­க­ளுக்கும்   அவர்கள் செவி­சாய்த்­தி­ருக்க வேண் டும். அத்­த­கைய அணு­கு­மு­றையின் மூலம் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்பைப் பெற்­றி­ருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனைச் செய்­ய­வில்லை.

யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்­ன­ரான பத்து ஆண்­டு­க­ளிலும் தங்­க­ளுக்கு எதிர்­ம­றை­யான நிலைப்­பாட்­டி­லேயே அர­சியல் பயணம் செய்த தமிழ் மக்­களை ஏறிட்டுப் பார்க்­கக்­கூட அவர்கள் விரும்­ப­வில்லை. தயா­ராக இருக்­கவும் இல்லை.

நாட்டின் மொத்த சனத்­தொ­கையில் 74 வீதத்தைக் கொண்­டுள்ள சிங்­கள மக்­களின் வாக்­கு­களில் மாத்­தி­ரமே இந்தத் தேர்­தலில் வெற்­றியை நிலை­நாட்ட வேண்டும் என்ற இன­வாத நோக்­கத்­தி­லேயே அவர்­க­ளு­டைய அர­சியல் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன.

தேர்தல் காலத்தில் மக்கள் தமது அபி­லா­ஷை­களை நிறை­வேற்றிக் கொள்ள முயற்­சிப்­பது ஒன்றும் புதிய நட­வ­டிக்கை அல்ல. அர­சியல் கட்­சி­க­ளி­டமும் முன்­ன­ணியில் உள்ள வேட்­பா­ளர்­க­ளி­டமும் தங்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் முன்­வைத்து அவற்­றுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான உத்­த­ர­வா­தத்தைப் பெற முயற்­சிப்­பதே அர­சியல் நடை­முறை.

இதற்கு அமை­வா­கவே ஐந்து கட்­சிகள் ஒன்­றி­ணைந்து 13 கோரிக்­கை­களை முன்­வைத்து தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்குத்  தமிழ்த்­த­ரப்பு முனைந்­தி­ருந்­தது. அந்தத் தரு­ணத்தில் தமிழ் மக்­களின் அந்த கோரிக்கைக் குர­லுக்கு பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்தாபய ராஜ­பக் ஷ செவி­சாய்க்கத் தயா­ராக இருக்­க­வில்லை. அதனை அவர் நேர­டி­யா­கவே கூறி­யி­ருந்தார். தமிழ் மக்­களின் ஆத­ரவு வேண்டும் என்று கோரிய அவர் அந்த மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து பேசு­வ­தற்கும் அவற்றைக் கேட்­ப­தற்­குக்­கூடத் தயா­ராக இல்­லாத நிலை­யி­லேயே தேர்­தலை எதிர்­கொண்டு தனிச்­சிங்­கள வாக்­கு­களின் மூலம் வெற்றி பெற்று அதி­காத்­திற்கு வந்­துள்ளார்.

தேர்தல் காலத்தில் தன்­னுடன் வந்து இணை­யு­மாறு தமிழ் மக்­க­ளுக்குத் தான் விடுத்த வேண்­டு­கோளை அவர்கள் ஏற்­கா­தது மட்­டு­மல்ல. தேர்­த­லிலும் தனக்கு அவர்கள் பங்­க­ளிக்­க­வில்லை என்­பதை வெளிப்­ப­டை­யா­கவே கோத்தாபய தெரி­வித்­தி­ருந்தார். ஆனாலும் நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் தானே ஜனா­தி­பதி என்ற ரீதியில் தமிழ் மக்­க­ளை நோக்­கு­வ­தா­கவும், அந்த மக்­களும் தன்­னுடன் இப்­போ­தா­வது இணைந்து நாட்டின் முன்­னேற்­றத்­திற்குப் பங்­க­ளிக்க முன்­வர வேண்டும் என கோரி­யி­ருக்­கின்றார்.

இந்த நேரத்­தி­லும்­கூட தமிழ்மக்­க­ளுக்கு ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. விசேட­மாக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டிய பொறுப்பும் இருக்­கின்­றது என்­ப­தைக்­கூட அவரால் கோடிட்டுக் காட்டி தன்­னுடன் இணைந்து பணி­யாற்ற வரு­மாறு அவர் அழைப்பு விட­வில்லை. இந்த நிலைமை மிகவும் கவ­லைக்­கு­ரி­யது.

தனிச்­சிங்­கள மக்­க­ளு­டைய ஆத­ரவில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்­கத்­துடன் செயற்­பட்டு வெற்றி பெற்­றுள்ள ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ நிர்­வாகத் திறமை கொண்­டவர். நினைத்த காரி­யத்தை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்றி முடிப்­பதில் வல்­லவர்.

நல்­லாட்சி அர­சாங்கம் என பெயர் பெற்­றி­ருந்த முன்­னைய அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுக்­கின்ற தீர்­மா­னங்­களை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­று­கின்ற திறன் குறைந்தவராகவே செயற்பட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜ­பக் ஷ அத்தகையவர் அல்லர். அவரிலும் பார்க்க நிர்வாகத் திறனுடையவர். துணிவுடையவர். செயல் வல்லமை கொண்டவர்.

ஆனால் அவருடைய வரலாற்றுப் பின்னணி தமிழ் மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சிகரமானதாக படியவில்லை. அச்சத்தையும் சந்தேகத்தையுமே படிய வைத்துள்ளது. ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள முறையும் அவர் என்ன செய்வார் தங்களுடைய விடயங்களில் எவ்வாறு நடந்து கொள்வார் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கே வழிசமைத்துள்ளது.

இந்த நிலையில் அவர் தமிழ்மக்கள் மீது காட்டுகின்ற சமிக்ஞைகள் ஆரோக்கியமானதாகவும் வெளிப்படையானதாகவும் அமைய வேண்டியது அவசியம். அதேநேரம் தமிழ்த்தரப்பு விடயங்களில் மிகவும் கடுமையானவராகக் கருதப்படுகின்ற அவரை தமிழ்த்தரப்பும் உரிய முறையில் அணுகி அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளின் மூலம் அவரை வசப்படுத்துவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டிய தேவையும் உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைமையை தமிழ் மக்களுக்கு இணக்கமுள்ளததாக மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது.

இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கு தமிழ்த்தரப்பு ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தந்திரோபாயச் செயற் பாடுகளை சரியாக இனம் கண்டு ஓரணியில் ஒன்றிணைந்து ஒரு குரலில் பேச வேண்டும். அந்தப் பேச்சுக்களும் அவர்கள் வெளியிடுகின்ற கருத்துக்களும் மிக மிக பொறுப்புணர்ச்சியுடனும் மிக மிக கவனமாகவும் வெளிவர வேண்டியது அவசியம்.

இந்தக் கைங்கரியம், கல்லில் நார் உரிப்பதிலும் பார்க்க பல மடங்குகடினமான காரியம் என்பதை மனதில் இருத்திச் செயற்பட வேண்டி இருக்கும் என்பதையும் மறந்துவிடலாகாது.


பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22