"தமிழ்மக்கள் வாக்களித்திருந்தது வேற்று இனத்தவர் ஒருவருக்கல்ல": தமிழ் மக்கள் இழைத்த தவறுதான் என்ன?

Published By: J.G.Stephan

24 Nov, 2019 | 03:36 PM
image

வேட்பாளர் இருவருமே உண்மை பௌத்தர்கள், பேரினவாத சிங்களவர் என்ற அடிப்படையில் இவர்களிடம் காணப்பட்ட வேற்றுமைதான் என்ன? இவர்களுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் இழைத்த தவறுதான் என்ன? 

வர­லாற்றுக் கால பௌத்த சிங்­கள மன்னன் ஒருவன் மீண்டும் நாட்டை ஆளப் பிறந்­துள்­ளானா, என ஆச்­ச­ரி­யத்­துடன் அண்­ணாந்து பார்ப்­ப­துபோல் மக்கள் பார்த்த ஒரு நிகழ்­வாக நாட்டின் 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக பதவி ஏற்ற  கோத்­த­பாய ராஜபக் ஷவின் பதவிப் பிர­மாண வைபவம் இடம்­பெற்­றிருந்தது. 

பழைய ராச­தா­னி­யான அநு­ரா­த­பு­ரத்தில் சிங்­கள பௌத்த மன்­னர்­களின் வர­லாறு­களை நினைவூட்டும் ருவன்­வெ­லி­சா­ய­வுக்கு அருகில், புனித வெள்­ள­ரசு மர நிழல் தெறிக்கும் மேற்­படி புனித மண்ணில், பௌத்த குருமார் புடை­சூழ வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்த வைபவம் கடந்த திங்­கட்­கி­ழமை (18.11.2019) இடம்­பெற்­றுள்­ளது. 

தனது பத­வி­யேற்பு வைப­வத்­தின்­போது 7 ஆவது ஜனா­தி­ப­தி ஆற்றிய உரை, சர்­வ­தேச அள­விலோ அன்றி உள்­நாட்டு அள­விலோ முக்­கி­ய­மு­டை­ய­தாக  காணப்­ப­டு­கி­றதோ என்­னவோ சிறு­பான்­மை­யி­னரைப் பொறுத்­த­வரை குறிப்­பாகத் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை மிக மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்ததாக  இருக்­க­லா­மென்­பது கவ­னத்­துக்­கு­ரியது.   

புதிய ஜனா­தி­ப­தி­ தனது உரையில் மிக அழுத்­த­மா­கவும் அதி­கா­ர­பூர்­வ­மா­கவும் சில கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தினார்.

 

“நான் ஒரு சிங்­கள பௌத்தன். எனவே எனது நாட்டின் சிங்­கள பௌத்­தத்தின் பாது­கா­வ­ல­னாக விளங்­குவேன். 

சிங்­கள மக்­களின் வாக்கின் அடிப்­ப­டையில் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ டேன். ஜனா­தி­ப­திக்­கு­ரிய நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாகப் பயன்­ப­டுத்த பின் நிற்­க­மாட்டேன். தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை கோரி­யி­ருந்தேன். ஆனால் அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. எமது தாய்­நாட்டை பயங்­க­ர­வாதம், பாதாள உலக குழு­வி­ன­ரி­ட­மி­ருந்தும், கப்பம் பெறுதல், போதைப்­பொருள் வர்த்­தகம், பெண்கள், சிறுவர் துஷ்­பி­ர­யோகம் அனைத்­தையும் இல்­லா­தொ­ழித்து சிறந்த சமூ­க­மாக இலங்­கையை வடி­வ­மைக்கப் போகிறேன்” என  ஜனா­தி­பதி தனது உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார். 

தேர்தல் முடிவைத் தொடர்ந்து பத­வி­யேற்பு வைப­வத்தில் ஜனா­தி­பதி ஆற்­றிய உரை உள்ளிட்ட விவ­கா­ரங்கள், தமிழ் மக்­களை அந்நி­யப்­ப­டுத்திக் காட்டும் போக்­கையும் இன­வாத மயப்­பட்ட பார்­வை­யையும் உண்­டாக்­கி­விட்­டதோ என்று அச்­சப்­படும் அள­வுக்கு காணப்­ப­டு­கி­றது. இலங்கை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்கும் போக்­கா­னது இன­வாத கண் கொண்டு பார்க்கும் நிலை­யொன்றை உரு­வாக்­கி­யி­ருப்­ப­துடன் தமிழ் மக்­களை எதி­ரி­க­ளாக வர்­ணித்­துக்­காட்டும் புதிய பரி­ணா­மத்தை ஜனா­தி­பதியின் உரையும் விமர்­ச­னங்­களும் கொண்­டுள்­ள­தாக பேசப்­ப­டு­கின்­றன. 

“சிங்­கள மக்­களின் வாக்­குப்­ப­ல­மொன்றே என்னை ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்க வைத்தது. நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவைக் கோரி­யி­ருந்தேன். எனது எதிர்­பார்ப்பு உதா­சீனம் செய்­யப்­பட்­டு­விட்­டது” என்ற தோர­ணையில் ஜனா­தி­ப­தியின் உரை அமைந்­தி­ருந்­தமை அனை­வ­ரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.   

தமிழ்மக்கள் ஏன் இவ்­வா­றா­ன­தொரு முடிவை எடுக்க வேண்டி இருந்­தது. அவர்கள் வாக்­க­ளித்த குறித்த வேட்­பா­ளர் தமிழ் மக்­களால் மகாத்­மா­வா­கவோ அல்­லது மகா­னா­கவோ கரு­தப்­பட்­டாரா என்­ப­தெல்லாம் ஒரு­புறம் இருந்­தாலும் யதார்த்­தங்­களும் எதிர்­பார்ப்­பு­களும் மாறு­பட்­ட­தா­கவே இருந்­துள்­ளன. 

நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யா­கவும் நீறு­பூத்த நெருப்பா­கவும் இருந்து வருவது இனப்­பி­ரச்­சி­னை­யே. 

இந்தப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வைப் பெறு­வ­தற்­காக தமிழ்மக்கள் பல்­வேறு வடி­வங்­களில், உத்­தி­களில் போராடி வந்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் பல சாணக்­கி­யங்­களில் ஈடு­பட்டுப் பார்த்­தி­ருக்­கி­றார்கள். தந்­தி­ரங்­களை கையாள முயற்சி செய்து வந்­தி­ருக்­கி­றார்கள். எல்­லாமே புறக்­கு­டத்து நீராக அவ­மா­கி­ய­தே­யுண்மை.  

இவ்­வா­றா­ன­தொரு தொடர்­நிலை அனு­ப­வங்­க­ளுக்குப் பின்னால் நடக்க இருந்ததே 7 ஆவது ஜனா­தி­ப­தியை தெரிவு செய்யும் தேர்­த­ல். போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­களில் இரண்­டொ­ரு­வரைத் தவிர ஏனைய வேட்­பா­ளர்கள் அனை­வ­ருமே சிங்­கள பௌத்­தர்­கள்தான். அதிலும் குறிப்­பாக பிர­தான போட்­டி­யா­ளர்­க­ளான பொது­ஜன பெர­முன வேட்­பா­ள­ரா­யினும் சரி, புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பா­ள­ரா­யினும் சரி அடிப்­ப­டையில் இரு­வ­ருமே பௌத்­தர்கள், சிங்­கள மொழியைத் தாய் மொழி­யாகக் கொண்­ட­வர்கள்.

இவ்­வி­ரு­வரில் தமது நீண்­ட­கால தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணக்­கூ­டிய நியா­ய­மான ஒரு­வரை தீர்­மா­னிக்க வேண்­டிய காலத்தின் கட்­டாயம் தமிழ்மக்கள் முன்­ கொண்டு வந்து நிறுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதே  உண்மை. இன்­னொரு வகையில் ஆரா­யப்­ப­டு­மானால் இரு­வ­ருமே ஒரே தேசத்தைச் சேர்ந்த இரட்­டை­யர்கள், ஒரே பண்­பாடு பாரம்­ப­ரி­யங்­க­ளி­னூ­டாக வளர்ந்து வந்­த­வர்கள், அர­சியல் என்ற கொள்கை கோட்­பா­டு­களில் மாறு­பட்ட கொள்கை கோட்­பாடு கொண்­ட­வர்­க­ளாக காணப்­பட்­டாலும் இரு­வரின் நதி மூலம் ஒன்றே. அவ்­வா­றான சூழ்­நி­லையில் சாத­க­மான நபர் யாராக இருக்க முடி­யு­மென்­பதை கண்­ட­றி­வதில் கடி­னங்கள் இருந்­தாலும் கண்­ட­றிய வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டது தமிழ்மக்­க­ளுக்கு என்­பது யதார்த்­தமே.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யில்தான் தமிழ் மக்கள் தங்கள் தெரிவை நிதா­ன­மா­கவும் கவ­ன­மா­கவும் ஆராய்ந்து முடி­வெ­டுக்க வேண்­டிய நிலைமை உரு­வா­னது. இதற்கு அவர்கள் பயன்­ப­டுத்­திய உரை­கல்தான் பின்­வரும் கார­ணி­க­ள். வேட்­பா­ளர்­க­ளு­டைய தேர்தல் விஞ்­ஞா­பனம், அவர்­க­ளு­டைய அர­சியல் அரிச்­சு­வ­டிகள், ஐந்து கட்­சிகள் சேர்ந்து முன்­வைத்த 13 அம்ச கோரிக்கை ஆகி­யவை தமிழ்மக்­களின் முடி­வுக்கு பின்­னணி வகுத்­தன.  

இதில் ஒப்­பீட்டு ரீதி­யாக குறித்த ஒரு வேட்­பா­ளரின் தீர்­மா­னங்­களும் விஞ்­ஞா­ப­னங்­களும் அவரின் மேடைப்­பேச்­சுக்­களும் சாத­க­மாக இருக்க முடி­யு­மென்ற நம்­பிக்­கையின் பேரி­லேயே தாங்கள் அவ்­வா­றா­ன­தொரு முடி­வுக்கு வந்­த­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் கூறி­யி­ருந்­த­துடன் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளிலும் கூட்­ட­மைப்­பினர் ஈடு­பட்­டி­ருந்­தனர். 

10 வரு­டங்­க­ளுக்கு முன் நிகழ்ந்த கொடு­மை­யான அனு­ப­வங்கள், இழப்­புக்கள் அதன்­முன்னும் பின்னும் ஏற்­பட்ட பாதிப்­புக்கள், தமிழ் கட்­சி­க­ளோ, மக்­க­ளோ மறந்­து­விட முடி­யாத வடுக்­க­ளாக இருந்த கார­ணத்­தி­னா­லேயே இத்­த­கை­ய­தொரு முடிவை அவர்கள் எடுக்க வேண்­டியதாயிற்று. இதுவே தென்­ப­குதி சமூ­கத்தின் மீதும் தலை­மைகள் மீதும் பகை­யு­ணர்­வையும் தீராத கோபத்­தையும் தமிழ் மக்­க­ளுக்கு இன்னும் உண்­டாக்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

தமிழ்மக்­களைப் பொறுத்­த­வரை சிங்­கள மக்கள் தம்மை ஆளும் இனம் அர­சியல் உரி­மை­களை விட்­டுத்­தர முடி­யாத  கொடாக் கண்­டர்­க­ளா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.  ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் சேர்ந்து சமஷ்­டியைப் பெற முயற்­சிக்­கி­றார்கள், நாட்டை துண்­டாடப் போகி­றார்கள். வட–கிழக்கை  இணைப்­ப­தற்கு சதித் திட்டம் தீட்­டு­கி­றார்கள், நாடு துண்­டா­டப்­படப் போகி­றது என்ற அதிதீவி­ர­மான கற்­பனை கார­ண­மாக தென்­னி­லங்கை மக்கள் தம் தாய் நாட்டை பாது­காக்கக் கூடிய துட்­ட­கை­முனு போன்ற ஒரு­வ­ருக்கு தமது முழு­மை­யான ஆத­ரவை வழங்­க­வேண்டும் என்ற ஆவே­ச­மான எண்­ணத்­துடன் பொது­ஜன பெர­முன வேட்­பா­ளரை ஆத­ரித்து வெற்றி பெற வைத்­துள்­ளார்கள். 

இன்­னு­மொரு முறையில் கூறு­வ­தானால் வடக்கு–கிழக்கைச் சேர்ந்த சிறு­பான்மை மக்கள் தமது செய்­தியை ஒன்­று­கூடி சொல்­வ­தற்­காக சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளித்­துள்­ளனர். தென்­ப­குதி பெரும்­பான்மை மக்­களோ பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு அளித்­துள்­ளனர்.  இதன் குறி­காட்டி எவ்­வாறு அமை­கி­ற­தென்றால் சிங்­கள தேசம் ஒரு வேட்­பா­ளரை ஆத­ரிக்க அதற்கு எதி­ராக தமிழ் பேசும் மக்­களும் முஸ்லிம் மக்­களும் மென்­போக்கு தன்மை கொண்­டவர் என பாவனை பண்ணிக் கொண்டு புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித்­துக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர்.

தென் துரு­வத்தின் நோக்கம் ஒரு பார்வை கொண்­ட­தா­கவும் வட துரு­வத்தின் இலக்கு இன்­னொரு வகைப்­பட்­ட­தா­க­வுமே அமைந்த தேர்­த­லாக இது நடந்­தே­றி­யுள்­ளது. இந்த தேர்தல் முடி­வு­க­ளா­னது ஒரு பக்­கத்தின் பலத்­தையும், இன்­னொரு பக்­கத்தின் பல­வீ­னத்

­தையும் காட்­டு­வ­தாக எவர் ஒருவர் கற்­பனை பண்ணிப் பார்க்­கி­றாரோ அது இந்த நாட்டின் தேச ஒற்­று­மைக்கும் இனங்­களின் கூட்­டாண்­மைக்கும் பாத­க­மாக அமைந்து விடும் என்­பதை யாரும் மறுத்துவிட முடி­யாது.

“நான் சிங்­களப் பெரும்­பான்­மையின் உத­வி­யு­டனும், அனு­ச­ர­ணை­யு­டனும் வெற்றி பெறும் வாய்ப்புக் கொண்­ட­வ­னாக இருக்­கிறேன்” என நம்பிக் கொண்­டாலும், “சிறு­பான்மை மக்கள் எனக்கு ஆத­ரவு தர வேண்­டு­மெனக் கோரி­யி­ருந்தேன். எனது முயற்சி வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. இருந்­த­போ­திலும் என்னை ஆத­ரித்­த­வர்­க­ளுக்கும் வாக்­க­ளிக்க தவ­றி­ய­வர்­க­ளுக்கும் கூட நான் ஜனா­தி­ப­தி­யா­கவே பாகு­பா­டின்றி செயற்­ப­டுவேன்” என ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ  தனது உரையின்போது குறிப்­பிட்­டி­ருந்­தமை வர­வேற்­கத்­தக்க விடயம் மாத்­தி­ர­மல்ல, ஒரு தலை­வ­னுக்­கு­ரிய உயர் பண்­பையும் புலப்­ப­டுத்­து­வ­தா­கவே இருந்தது. 

கடந்த ஏழு தசாப்த கால வர­லாற்று விரி­ச­லுக்குப் புதிய ஜனா­தி­பதி முடிவு காண வேண்­டு­மென்­பது தான் இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூ­கத்­தி­னரின் பிரார்த்­த­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது. சிங்­கள தேசமும் தமிழர் தேசமும் பிள­வு­பட்டு நிற்­கின்­றது. இந்த வர­லாற்றுப் பகை­மைக்கு முடிவு காண்­பது கடினம் என்ற நிலைப்­பாடும் இறுக்­க­மான மனப்­பாங்கும் மாற்­றப்­பட வேண்­டு­மாயின் இன்­றைய ஜனா­தி­ப­தி­, சிறு­பான்மை மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்கு முயற்சி எடுக்க வேண்டும். காலங்கால­மாக தசாப்தம்தசாப்­த­மாக கூறப்­பட்டு வரும் இப்­ப­கை­மைக்கு ஒரு தீர்க்­க­மான முடிவை காண வேண்­டிய வர­லாற்றுப் பொறுப்பு தன்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அத்­த­கை­ய­தொரு வாய்ப்பை தன் தாய் மண்­ணின் மைந்தர்கள்  தன்­னிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். என்ற உயர்ந்த மனப்­பாங்கு கொண்­ட­வ­ராக மாற வேண்­டு­மென்­பதே அனைத்து தரப்­பி­னர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பாக உள்ளது. 

இந்த விட­யத்­துக்கு கட்­டியம் கூறு­வ­து­ போ­லவே ஜனா­தி­ப­தி, நாட்டு மக்­க­ளுக்கு ஒரு செய்­தியை வெளி­யிட்­டுள்ளார். நாட்டில் வாழும் அனைத்து மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் இனங்­கண்டு தகுந்த தீர்வை தான் எடுக்கப் போவ­தா­கவும் அனைத்து இன மக்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்க ஏற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெனவும்  அவர் கூறிய கருத்­தா­னது சிறு­பான்மை சமூ­கத்­தினர் மத்­தியில் மெல்­லிய நம்­பிக்­கை­யையும் சந்­தோஷத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது மனநிம்மதி அளிக்கிறது.

ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்­துக்கு ஏற்­பவே பிர­த­ம­ராக பத­வி­யேற்றுக் கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும்  தாராளப் பண்­புடன் இவ்­வா­றா­ன­தொரு கருத்தை தெரி­வித்­துள்ளார்.  தமிழர் மனங்­களை வெல்லும் கருத்­தாகக் கூட இது நினைக்க வைக்­கி­றது. “இன்­னொ­ரு­வ­ருக்கு தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தார்கள் என்­ப­தற்­காக நாம் தமி­ழர்­களை

 ஒதுக்­கி­விட முடி­யாது. வேறு­பாடு காட்­டவும் முடி­யாது அவர்கள் இந்­நாட்டில் தலைநிமிர்ந்து வாழும் நிலையை எமது ஆட்­சியில் ஏற்­ப­டுத்­துவோம். தமிழ் மக்­களை வென்­றெ­டுப்­போ­ம்” என  செவ்­வி­ ஒன்றில் தெரி­வித்­தி­ருந்தார். அவரின் இந்தக்­க­ருத்­தா­னது மிக ஆழ­மான அனு­மா­னங்­களின் அடிப்­ப­டையில் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது என்று கூட எடுத்துக் கொள்­ளலாம்.

நாட்டின் தேசப் பிர­ஜைகள் என்ற வட்­டத்­துக்குள் அடக்­கப்­ப­டு­கின்ற மூவின மக்­களும் நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்­கா­கவும், பாது­காப்­புக்­கா­கவும், மேம்­பாட்­டுக்­கா­கவும் ஒன்றிணைந்து செயற்­பட வேண்­டு­மென்­பதுமே அனை­வ­ரதும் கன­வு. அதிலும் குறிப்­பாக தமிழ் மக்கள் என்ற ஓர் இனம் தேசத்­து­டனும் தேசி­யத்­து­டனும் ஒன்று கலக்க வேண்­டு­மாயின் புதிய ஜனா­தி­ப­தி­ துணிச்சல்மிக்க கைங்­க­ரி­யங்­களை செய்தாக வேண்டும்.

தமது உரி­மை­க­ளுக்­கா­கவும் அதி­கா­ரங்­க­ளுக்­கா­கவும் போராடிப்போராடி செய்த  தியா­கங்கள் மதிக்­கப்­பட வேண்டும். அந்த தியா­கத்தின் மூல­வேர்கள் அறி­யப்­பட்டு எந்த நோக்­கத்­துக்­கா­கவும் உரி­மை­க­ளுக்­காகவு­மாக போராடி வந்­தார்­களோ அவர்­களின் தாய்ப் பூமியில் சுதந்­தி­ரத்­து­டனும் அதி­கா­ரத்­து­டனும் ஒரு­மித்த நாட்­டுக்குள் வாழும் மகத்­து­வ­மான அர­சியல் சூழ­லொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்கு ஒரே வழி முன்­னெ­டுத்து இடை நடுவில் முறிந்­து­போன பேச்­சு­வார்த்­தைகள் மற்றும் புதிய அர­சியல் சாசன விவ­கா­ரங்கள் மீண்டும் தொட­ரப்­பட வேண்டும்.

தொட­ரப்­ப­டு­வது மட்­டு­மின்றி இனங் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடித் தீர்வு காணப்­பட வேண்டும். அவ்­வ­கையில் நல்­லாட்சி அர­சாங்­க­மென்ற கடந்த ஆட்­சியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விவ­கா­ரங்கள் குறைப் பிர­ச­வ­மாக போனது மட்­டு­மன்றி பல குழப்­பங்­க­ளையும் உண்டு பண்­ணி­யது என்­பதை நாடறியும்.

அடிப்­படை வாதம், மத­வாதம், இன­வாதம், பேரி­ன­வாதம் என்று நாட்டை சீர­ழிக்க எத்­த­னிக்கும் காலத்­துக்கும் நாட்­டுக்கும் ஒவ்­வாத கோட்­பா­டு­க­ளையும் கோஷங்­க­ளையும் மண்­மூட வைத்து தேசத்தை பொரு­ளா­தார ரீதி­யா­கவும் சமூக ரீதி­யா­கவும் உயர்த்தக் கூடிய சிறப்பு மிக்க கொள்­கை­களை முன்­மொ­ழிய வேண்டும்.

வட­புல புத்­தி­ஜீ­விகள் மற்றும் தென்­னி­லங்கை சிவில் சமூ­கத்­த­வர்கள் அண்­மையில் விடுத்­தி­ருந்த அறிக்­கை­யொன்றில் வட­கி­ழக்கில் வாழ்வோர் எமது சகோ­தர இனத்­த­வர்கள் அவர்­களும் தேசப்­பற்­று­டனும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ­வைக்க என்­னென்ன செய்ய வேண்­டுமோ அதை தென்­னி­லங்கை வாழ்மக்கள் தாரா­ள­ மனதுடனும் நெகிழ்வு­டனும் தூர நோக்­கு­டனும் முன்­வந்து செய்ய வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். இந்­நாட்டில் புரை­யோ­டிப்போய் நீறு­பூத்த நெருப்­பாக இன்னும் தக­ த­கத்துக் கொண்­டி­ருப்­பது இனப்­பி­ரச்­சி­னை.­ 

இனப்­பி­ரச்­சி­னை­யென்­பது ஒரு சமூ­கத்தின் இனத்தின் விதண்­டா­வா­த­மான கோஷமும் அல்ல கோரிக்­கையும் அல்ல, அது மொழி, பிர­தேசம், கலா­சாரம் என்ற பெறு­மதி மிக்க விழு­மி­யங்­களைக் கொண்­டது. அவற்றின் அடிப்­ப­டையில் எழுந்­த­வையே இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னை­யென்னும் பூதம். இதற்­கான தீர்வை, முடிவை அர­சியல் அதி­கார முறைமை சார்ந்­த­தா­கவே தீர்க்­கப்­பட வேண்­டு­மென்­பது தமிழர் தரப்பு வாதம். அவ்­வா­றா­ன­தொரு பிரத்­தி­யேக உரி­மைக்கு உடை­ய­வர்கள் தமி­ழர்களல்லர் என்­பது ஆட்­சி­யா­ளர்­களின் தர்க்கம். இவையே இந்த நாட்டின் அடிப்­படைப் பிரச்­சி­னை­யாக கடந்த 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக நீடித்து வரு­கி­றது. இப்­பி­ரச்­சினை பேரின தலை­மை­களால் ஆழ­மாக அறி­யப்­பட்டு ஏற்றுக் கொள்­

ளப்­பட்­ட­போதும் அதை தீர்ப்­ப­தற்­காக வழி­வ­கை­களை காண்­பதில்தான் பல்­வேறு தடங்­கல்கள் காணப்­ப­டு­கின்றன.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றுப் போக்கில் அதிலும் குறிப்­பாக தமிழ்மக்­களின் அர­சியல் பய­ணத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் உடன்­பட்டுப் போகிற அள­வுக்கு ஏனைய கட்­சி­க­ளுடன் உடன்­பட்டுப் போவ­தையோ அல்­லது ஏற்றுக் கொள்­வ­தையோ இல்­லை­யென்று சொல்­லப்­படும் அபிப்­பி­ரா­ய­மொன்று தொடர்ந்து இருந்து வந்­துள்­ளது.  இக்­குற்­றச்­சாட்டில் உண்­மை­யுண்டோ இல்­லையோ அவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய விடயம் தான். அதற்குக் காரணம் கடந்தகால அனு­ப­வங்­க­ள்தான். 1965ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியும், தமிழ்க் காங்­கி­ரஸும் பங்­காளிக் கட்­சி­க­ளாக இருந்­ததும் இடையில் முறிந்து போய் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் அமைச்சராக  இருந்த திருச்­செல்வம் பத­வியை ராஜி­னாமா செய்த சம்­ப­வங்களும் நடக்­கத்தான் செய்­தன. 

இதே­போன்­ற­தொரு உடன்­பாடு அல்­லது ஆத­ரவு வழங்கும் சந்­தர்ப்­பங்கள் ஏனைய கட்­சி­க­ளுடன் இருந்­த­தில்­லை­யென்ற கார­ணத்­தினால் இன்றும் அக்­குற்­றச்­சாட்டு இருந்து கொண்­டுதான்  இருக்­கி­றது. இந்த அடிப்­ப­டையில் தான் 2015ஆம் ஆண்டின் அர­சாங்­கத்­துடன் உடன்­பட்­டுப்­போன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தற்­போ­தைய நிலையில் அழைப்பை ஏற்­றுக்­கொள்­ள­வில்­லை­யென சுட்­டிக்­காட்­டு­வோரும் உள்­ளனர்.

எது எவ்­வாறு இருந்­த­போ­திலும் அண்­மைய ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களைத் தொடர்ந்து கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, செய­லாளர் துரை­ராஜசிங்கம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் போன்றோர் புதிய ஜனா­தி­ப­தி­யுடன் தமிழ்மக்­களின் எதிர்­கால நன்மை கருதி பேச்­சு­வார்த்தை நடத்­து­வது தொடர்பில் ஆராய்ந்து வரு­கிறோம் என்ற கருத்தை வெளி­யிட்­டுள்­ளனர். இது ஒரு நல்ல சகு­ன­மாகக் கூட கொள்­ளலாம்.

வட­ப­குதித் தலை­வர்கள் பலர் ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வு­க­ளா­னது தமிழ்­மக்­களின் ஏகோ­பித்த முடிவை மாத்­தி­ர­மன்றி, அவர்­களின் செய்­தி­யையும் சொல்­லி­யி­ருக்­கி­றது. இந்த நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று  மிக நீண்­ட­கா­ல­மா­கவே துருப்­பி­டித்த நிலையில் காணப்­ப­டு­கி­றது. தமிழ்­மக்கள் 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற யுத்­தத்­தின்­போது ஏற்­பட்ட அனர்த்­தங்கள், அழி­வுகள், அழிப்­புக்கள், அநீ­திகள் என்­ப­வற்றை இன்னும் மறந்து போக­வில்லை என்­ப­தையும் தமக்­கு­ரிய ஒரு அர­சியல் முறை­யான பல­மான பாது­காப்பை வேண்டி நிற்­கின்­றார்கள் என்ற உண்­மை­யையும் வட­–கி­ழக்கில் அளிக்­கப்­பட்­டி­ருக்கும் வாக்­க­ளிப்பின் மூலம் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

எனவே தான் புதிய ஜனா­தி­பதி, தமிழ் மக்க ளையோ, அவர் சார்ந்த தலை­மை­க­ளையோ, பகைமைக் கண் கொண்டு பார்ப்­ப­தையோ, எண்­ணு­வ­தையோ தவிர்த்­துக்­கொண்டு யதார்த்­தத்தின் நெடும் பய­ணத்தின் தாற் பரி­யத்தை உணர்ந்து அதற்­கு­ரிய நிரந்­தரப் பரி­கா­ரத்தைக் காண தனது பத­வி­யையும் அதி­கா­ரத்­தையும் நிறை­வேற்று வல்­ல­மை­யையும் பயன்­ப­டுத்த வேண்­டு­மென்­பது அனைத்து தமிழ் மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்பும் கோரிக்கையு­மாகும்.

அது­போன்றே தமிழ் தலை­மை­களும் இன்­னு­மொரு வாய்ப்பை உரு­வாக்க முடியும் என்ற வெறும் கற்­ப­னா­வாத பய­ணத்­துக்­காக காத்­தி­ருக்­காமல் கிடைத்­தி­ருக்கும் சந்­தர்ப்­பமும் வாய்ப்பும் சின்­ன­தாக இருந்­தாலும் அதை மலை­போல மாற்றும் சாணக்­கி­யத்­தையும் தந்­தி­ரோ­பா­யத்­தையும் வகுத்துக் கொள்­வதன் மூலமே எதிர்­கா­லத்தை நிர்­ண­யிக்க முடியும். அந்­த­வ­கையில், கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யொன்றின் தலை­வ­ரான செல்வம் அடைக்­க­ல­நாதன் அனைத்து மக்களின் பிரச்­சி­னை­க­ளையும் இனங்­கண்டு அவற்றைத் தீர்க்­கப்­போ­வ­தா­கவும் சம­வு­ரிமை வழங்­கப்­போ­வ­தா­கவும் ஜனா­தி­பதி கோத்­த­பாய கூறிய கருத்தை தாம் முழு­ம­ன­துடன் ஏற்றுக் கொள்­வ­தா­கவும் இக்­க­ருத்தின் அடிப்­ப­டையில் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் விரைவில் அவரை சந்­திக்­கப்­போ­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

இதையொரு சிறந்த வாய்ப்பாகவும் சந்தர்ப்பத்தை உண்டாக்கும் மேடையாகவும் பயன்படுத்தி நல்ல பயணத்துக்கான அடி யிடுகையை இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டுமென்பதே காலத்துக்குரிய சிறப்பான முடிவாக இருக்கும்.


திரு­மலை நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49