வாசுதேவவா? மைத்திரியா?

Published By: Digital Desk 4

24 Nov, 2019 | 12:30 PM
image

   ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. 

   கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ, கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

   அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் நியமித்ததுடன், (15) வெள்ளிக்கிழமை 16 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கமொன்றையும் அமைத்திருந்தார்.    ஐ.தே.மு. வின் அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவராக சபாநாயகர் கருஜயசூரிய உள்ள நிலையில், புதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதேவேளை, புதிய சபாநாயகராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் நம்பகரமாகத் தெரியவருகிறது.   எவ்வாறாயினும், பாராளுமன்றம் கூட்டப்படும்போது இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகுமெனவும் அறிய முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08