Published by R. Kalaichelvan on 2019-11-23 19:46:33
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் டெங்கு நோய் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதார திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் 305 பேர் டெங்கு நோய் தாக்கம் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த இரு வைத்தியர்களும் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்னர்.
இதனையடுத்து வைத்தியசாலை சூழல் மற்றும் வைத்தியர் விடுதி ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த சுகாதார திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.