ஹுறுலுவேவ பூங்கா வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

வட மத்திய மகாணத்தில் ஹவரணவில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

2018 ஆம் ஆண்டில் இதன் மூலம் 48.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்த வருமானம் 7.3 மில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு இங்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,644 ஆகும். 2018 ஆம் ஆண்டில் இத்தொகை 36,664 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த பூங்காவில் யானைகள் , இந்திய நட்சத்திர ஆமை, காட்டுக்கோழி, துருப் புள்ளிகள் உள்ள பூனைகள் முதலானவை காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். இலங்கை காட்டு வளம் 71.9 மில்லியன் ரூபா வெளிநாட்டு வருமானத்துக்கு பங்களிப்பு செய்துள்ளது.