மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரை துப்பாக்கியால் சுட்ட கணவர்: நடந்தது என்ன.?

Published By: Robert

30 May, 2016 | 06:55 PM
image

சவூதியை சேர்ந்த ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரை நபர் ஒருவர் சுட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகன்னத் அல் ஜப்ன் என்ற குறித்த மருத்துவர் பெண்னொருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். 

இந்த பிரசவத்தின்போது பெண்ணின் கணவரும் உடனிருந்துள்ளார். அப்போது தன்னுடைய மனைவியின் உடல் உறுப்புக்களை ஆண் மருத்துவர் தொட்டது அவருக்கு பிடிக்கவில்லை.

இதனையடுத்து, பிரசவம் முடிந்து பல நாட்களுக்கு பின்னர் குறித்த ஆண் மருத்துவரை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய தங்களுக்கு நன்றி கூற வேண்டும் என கூறி தங்களை சந்திக்க முடியுமா என கேட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் வைத்தியசாலையின் கீழே உள்ள பூங்காவில் சந்திக்கலாம் என முடிவெடுத்து சந்தித்தனர். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது குறித்த பெண்ணின் கணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரை சுட்டுவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

உடனடியாக பாதிகப்பட்ட மருத்துவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் துப்பாக்க்கியால் சுட்ட அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மனைவியை எப்படி ஒரு ஆண் மருத்துவர் பிரசவம் பார்க்க முடியும், எந்தவொரு பெண் மகப்பேறு நிபுணரும் இல்லாமல் எனது மனைவிக்கு ஆண் மருத்துவரை கொண்டு பிரசவம் பார்த்தது தவறு என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right