வவுனியா அட்டமஸ்கட பகுதியில் நேற்று  இரவு 46 கிலோ மரை இறைச்சியுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு வோகஸ்வெவ பகுதியில் இருந்து வவுனியா நகரிலுள்ள உணவகம் ஒன்றிற்கு பட்டா வாகனத்தில்  மரை இறைச்சி 46 கிலோ  ஏற்றி சென்ற போது நந்திமித்திரகம பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரைக் அட்டமஸ்கட பகுதியில்‌ வைத்து கைது செய்துள்ளனர்.

இச் சோதனை நடவடிக்கை மாமடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஜி.சி.கே.செனரத் தலைமையிலான பொலிஸாரால் கடத்தல் முறியடிக்கப்பட்டிருந்தது.

கைப்பற்றப்பட்ட மரை இறைச்சியும் பட்டாரக சாரதியும் ,   விசாரணைகளுக்காக மாமடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.