வெள்ளவத்தை - தெஹிவளைக்கு இடையிலான பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவர் தொடர்பான விபரம் இதுவரை தெரியவரவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.