நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன்ஸ் நோய் பாதிப்பிற்கான விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக வைத்திய துறையினர் தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக பார்கின்சன்ஸ் நோய் பாதிப்பிற்கான விழிப்புணர்வில் ஈடுபட்டிருக்கும் வைத்தியர் சாந்திப்பிரியா சிவா தெரிவிக்கையில்,“

பார்கின்சன்ஸ் எனப்படுவது நரம்பு சார்ந்த ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம், தெற்காசியாவில் தற்போது ஒரு இலட்சம் பேருக்கு 200 பேர் என்ற அளவில் இருக்கிறது. இந்த விகிதமானது தொடர்ந்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

60 வயதை கடந்த முதியோர்கள் பார்க்கின்சன்ஸ் நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உடல் இயக்கத்தில் தளர்வு, குரல் நடுக்கம், நரம்பு தளர்ச்சி, நினைவுத்திறன் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

நடுக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், பாதிப்பை குறித்த விழிப்புணர்வை தற்போது அதிக அளவில் பெற்று வருகிறார்கள். இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு, விழிப்புணர்வு, பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கை, அதிலிருந்து மேல் வருவதற்கான பயிற்சி ஆகியவை தற்பொழுது வழங்கப்படுகிறது.

இத்தகைய பாதிப்பில் இருந்து குணமடைவதற்காக எளிய உடற்பயிற்சிகளும், காற்று வழியிலான பயிற்சிகளும், தண்ணீர் மூலமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு, அவர்களின் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. சிலருக்கு இதன் மூலம் முழுமையான நிவாரணம் கிடைத்து வருகிறது.” என்றார்.