மஸ்கெலியாவிலிருந்து நோர்வுட் பகுதிக்கு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற லொறியில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட மதுபான போத்தல் கொண்ட பெட்டிகள் வீதியில் விழுந்தமையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும்,இச்சம்பவமானது மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் லொறியில் இருந்து 12 பெட்டிகளில் இருந்த மதுபான போத்தல்கள் வீதியில் விழுந்து உடைந்துள்ளது.

அவ்வாறு உடைந்த மதுபான போத்தல்களை வீதியில் இருந்துலொறியின் சாரதி மற்றும் உதவியாளருடன் அப்பகுதி மக்களும் இணைந்து அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.