(எம்.எப்.எம்.பஸீர்)

சிலாபம், முன்னேஷ்வரம்பகுதியில் தேவாலயம் ஒன்றினை நடத்தி வந்த பெண் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிலாபம் பதில் உதவி பொலிஸ் அத்தியட்சர் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டர். 

இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை, குறித்த தேவாலயத்துக்குள் வைத்து பெற்றுக்கொள்ளும் போது அவரை இவ்வாறு கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த சந்ரசிறி தெரிவித்தார்.