(எம்.எப்.எம்.பஸீர்)

பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற விஷேட தகவல் ஒன்றுக்கு அமைய, சுமார் 12 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 10 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கொழும்பின் புற நகர் பகுதியான ராஜகிரிய பகுதியில் வைத்து  இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் இதன்போது 24 வயதுடைய ஆண் ஒருவரும் 31 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்ட்தாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

கைது செய்யப்ப்ட்ட ஆண் 24 வயதுடையவர் எனவும், பெண் 31 வயதுடையவர் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.