(எம்.மனோசித்ரா)

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கு பிரதானமாக கல்வித்துறை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த புதிய கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும, கட்சி, இன, மத பேதமின்றி அனைவருடனும் இணைந்து சேவையாற்றுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், கல்வி அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.