( எஸ்.சதீஸ் )

பொகவந்தலாவை லெட்சுமி தோட்டம் மேல்பிரிவு தோட்டத்தில் நேற்று இரவு தீ பரவியுள்ளதாக  பொகந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த குடியிருப்பில் விளக்கு திடீரென பற்றி எரிந்தமையினால் இந்த அனர்த்தம் இடம் பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்தினால் குடியிருப்பில் இருந்த உடைமைகள் தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.