சுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம் 

Published By: Vishnu

22 Nov, 2019 | 04:05 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதியும் கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது. 

நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற கூட்டத்தில் சு.க மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்டு ஏனைய கட்சிகளில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை, பொதுத்தேர்தலுக்கு தயாராகுதல் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. 

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்ட பௌசி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஏ.எச்.எம்.பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா , டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரை சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த போதிலும், பௌசி முன்னிலையாகாததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10