சீமெந்து இறக்குமதி சங்கத்தின் மூலம் சீமெந்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 995.00 ரூபாவாக காணப்பட்ட சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கபப்ட்டு இன்று முதல் 1095.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய  தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

2003 9ம் இலக்க நுகர்வோர் சட்டத்தின் கீழ் விலை நுகர்வோர் அதிகார சபையின் மூலம் சீமெந்திற்கான விலை அமுலாக்கப்பட்டுள்ளது. நூகர்வோர் விவகாரங்களின் செலவுகளை கருத்தில் கொண்டு  இந்த விலை சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.