2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை எனது ஆட்டம் தொடரும் - மெத்தியூஸ்

By Vishnu

22 Nov, 2019 | 03:01 PM
image

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாளக் உலகக் கிண்ணத் தொடர்வரை விளையாடுவதே எனது குறிக்கோள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளதுடன், அதுவரை சிறப்பாக விளையாடுவதற்கு நான் எனது உடற் தகுதியை பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய இலங்கை டெஸ்ட் அணியில் மிக வயதான (32) வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமான அவர், அன்றிலிருந்து இலங்கை அணியின் அதிக வெற்றிகளுக்கு பங்களிப்பு செய்தவர். 

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் சிறந்து விளங்கிய மெத்தியூஸ் எந்தவொரு போட்டியையும் மாற்றும் திறன் கொண்டவர்.  எனினும் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பந்து வீச்சிலிருந்து விலகியிருந்தாலும் ஒரு துடுப்பாட்ட வீரராக தனது பங்களிப்பை மெத்தயூஸ் வழங்கி வருகிறார்.

தேசிய அணிக்காக விளையாடும் காலத்தில் ஒரு துடுப்பாட்ட வீரராக அவர் பெற்ற சாதனைகள் மகத்தானவை. டெஸ்ட் அரங்கில் அவரது இன்னிங்ஸ் சராசரி 44.41, ஒருநாள் அரங்கில் அவரது இன்னிங்ஸ் சராசரி 42.7 மற்றும் இருபதுக்கு - 20 அரங்கில் அரவது இன்ன்ங்ஸ் சராசரி 27.1 ஆகும்.

நியூசிலாந்திற்கு எதிராக கடந்த ஆகஸ்டம் மாதம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளை தொடர்ந்து மெத்தியூஸ் ஓய்வு பெற்று வருகிறார்.

இந் நிலையில் அவரது ஓய்வு நேரத்தில் எவ்வாறு காலத்தை கழித்தார் என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவரிடம் மேற்கொண்ட விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சுமார் இரண்டரை மாதங்களுக்கு எனக்கு இடைவெளி கிடைத்தது. நான் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்க அந்த ஓய்வை பயன்படுத்தினேன். நான் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சிலும் கடுமையாக உழைத்தேன். நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு மீண்டும் பந்துவீச்ச தொடங்கியுள்ளதுடன், அதனால் கடந்த இரண்டரை மாதங்களாக நான் பந்துவீச்சு பயிற்சி செய்து வருகிறேன்.

அத்துடன் நான் நீண்ட காலமாக போட்டிகளில் விளையாட வரவில்லை. ஆனால் நான் பாகிஸ்தான் போட்டிக்கு நன்கு தயாராக இருக்கிறேன். இந்த போட்டிக்கான நாங்கள் (இலங்கை அணி) இதுவரை ஒன்றாக பயிற்சி தொடங்கவில்லை. ஆனால் எல்லோரும் தங்கள் சொந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

2009 இல் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்கிறோம். இந் நிலையில் எங்கள் ஒருநாள் மற்றும் டி - 20 அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தன. 

இதேவேளை டெஸ்ட் அணி சுமார் 10 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு புறப்படவுள்ளது. ஆகையினால் தனிப்பட்ட முறையில், நான் சுற்றுப் பயணத்திற்கு நன்கு தயாராக இருக்கிறேன்.

பாகிஸ்தானுடான டெஸ்ட் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து எங்களுக்கு அதிகளவான தொடர்கள் உள்ளன. ஆகவ‍ே அதற்கு தயாராக வேண்டும். 

அதேநேரம் பந்து வீச்சுப் பயிற்சியில் தற்போது ஈடுபடும் நான் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15