பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்கு இன்று  மாத்தறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக  நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதவான்  முன்னிலைப்படுத்தப்பட்டு  தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் இன்று (22.11.2019)  ரூபா 2500  பெறுமதியான காசு பிணை மற்றும் தலா ஐந்து  இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதேநேரம், பிணை வழங்குவோரில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரும் அல்லது நெருங்கிய உறவினர்களும் இருக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் நுழைவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டது.

தண்டனைச் சட்டம் மற்றும் பகிடிவதை சட்டத்தை மீறியதாக சந்தேக நபர்கள் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.