மருத்துவ கட்டணத்தை செலுத்தாததால் குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்த வைத்தியசாலை நிர்வாகம் - அடுத்து நடந்தது என்ன?

22 Nov, 2019 | 12:46 PM
image

மருத்துவகட்டணத்தை செலுத்தாதன் காரணமாக பிறந்த குழந்தையின் உடலை வைத்தியாசாலை கையளிக்க மறுத்ததை தொடர்ந்து கும்பலொன்று வைத்தியாசலைக்குள் அத்துமீறி நுழைந்து குழந்தையின் உடலை எடுத்துச்சென்ற சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசியாவின் பதாங் நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறந்த இஸ்லாமிய குழந்தையை உடனடியாக புதைக்கவேண்டும் என தெரிவித்த பெற்றோர்கள் உடலைதருமாறு கோரியுள்ளனர்.

எனினும் குறிப்பிட்ட மருத்துவமனையின்  நிர்வாகத்தினர் மருத்துவகட்டணத்தை செலுத்தும் வரை  ஆறுமாத குழந்தையின் உடலைஒப்படைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்தே அந்த பகுதியின் டாக்சி சாரதிகள் துணிச்சலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பிட்ட குடும்பத்தினரால் 25 மில்லியன் செலுத்த முடியாததால் அவர்களது குழந்தையின் உடலை  வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைக்க மறுப்பதைநாங்கள்அறிந்தபி;ன்னர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டோம் என டாக்சி சாரதிகளில் ஒருவர்தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எங்களை தடுக்க முயன்றனர் ஆனால் அவர்களால் எங்களை தடுக்க முடியவில்லைஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய உடலுடன் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதை  வீடியோக்கள் காண்பித்துள்ளன.

இது குறித்த வீடியோ வெளியானதை தொடர்ந்து இந்தோனேசியாவில் மருத்துவகட்டணங்களை செலுத்த முடியாதவர்கள் நிலை குறித்து விவாதம் மீண்டும் மூண்டுள்ளது.

மருத்துவகட்டணங்களை செலுத்தும் வரை புதிதாக பிறந்த குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு மருத்துவமனைகள் மறுக்கும் பல சம்பவங்கள் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு அரசாங்கம் திட்டமொன்றை வகுத்துள்ள போதிலும் போதிய நிதியுதவி இன்மையால் அந்த திட்டம் தோல்வியடைந்து வருகின்றது.

எனது மகன் பிரதேஅறையில் நீண்டநேரம் வைக்கப்பட்டிருந்தான் என தெரிவித்துள்ள தாய் சாரதிகள் இதனால்  சீற்றமடைந்தனர் எனவும் அவர்கள் பலவந்தமாக உடலை வெளியில் கொண்டுவந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47