இளம்பெண்கள் விற்பனைக்கு : அதிர்ச்சி விளம்பரம்.!

Published By: Robert

30 May, 2016 | 11:27 AM
image

girl-ap.jpg

தங்களிடம் பாலியல் அடிமைகளாக இருக்கும் பெண்களை பேஸ்புக் மூலம் விற்பனை செய்யும் முயற்சியில் ஐ.எஸ். அமைப்பு தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல இளம்பெண்களை பிடித்து வைத்து பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் அவ்வப்போது அவர்களை பொது இடங்களில் ஏலமும் விடுவார்கள். 

இப்போது அவர்கள் பேஸ்புக் வழியாகவும் பெண்களை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மே 20 ஆம் திகதி, அபு ஆசாத் அல்மேனி என்ற ஐ.எஸ். தீவிரவாதி ஒரு பதிவை வெளியிட்டார். அதில் “அடிமையை விலைக்கு வாங்க விரும்பும் எல்லா சகோதரர்களுக்கும், இது 8 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்புடையது” என்று கூறி ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதில்,  18 வயது கொண்ட ஒரு இளம்பெண் முகத்தில் கருப்பு துணி சுற்றிய நிலையில் அமர்ந்திருக்கிறார். அந்த பெண் விற்பனைக்கு என்று அந்த தீவிரவாதி குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பை கிளப்பியது. 

மேலும், அழுது கண்கள் சிவந்து முகம் வாடிய நிலையில் இருக்கும் மற்றொரு இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து, இவளும் விற்பனைக்குத்தான். உங்களுக்கு வேண்டுமா... வேண்டாமா... என்று கேட்டுள்ளார். சில மணி நேரங்களில் பேஸ்புக் நிறுவனம் அந்த புகைப்படங்களை நீக்கிவிட்டது.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஏராளமான இளம் பெண்களை பிடித்து வைத்து பாலியல் அடிமைகளாக பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மை, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12
news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32