நாட்டின் சில பகுதிகளில் அபிவிருத்தி நடிவடிக்கை காரணமாக கொழும்பை அண்டிய சில பிரதேசங்களில் நாளை காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில்  கொலன்னாவை நகர சபைக்கு உட்பட்ட மொரகஸ்முல்ல, ஒபேசேக்கரபுர, பண்டாரநாயக்கபுர, ராஜகிரிய, நாவல, கொஸ்வத்த, மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல பல்கலைக்கழகம்  வரையான பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல்  வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.