இலங்கையின் மிக அனுபவம் மிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர அந்த பதவியில் இருந்து நீக்கி, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.