தேசிய அளவிலான கிரிக்கெட் மைதான பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாதுக்க பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீலங்கா டெலிகொமுடன் இணைந்து குறித்த மைதானத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தையும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கைச்சாத்திட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொமிற்கு சொந்தமான 36 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகள் அடங்கிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளதுடன், மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. 

இந் நிலையில் கிரிக்கெட்டுக்கான கட்டமைப்புகளை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை தொலைத் தொடர்பு நிறுவன தலைவர் குமாரசிங்க சிறிசேன மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் மோகன் டி சில்வா ஆகியோருக்கு இடையே எஸ்.எல்.சி தலைமையகத்தில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி .ரஞ்சித் ரூபசிங்க, நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் ரஞ்சித் குணவர்தன, நிறுவனத்தின் சட்டப் பிரிவுத் தலைவர் மீரன் பெர்னாண்டோ, நிதித் தலைவர் மகேஷ் டி சில்வா, எஸ்.எல்.சி.யின் துணைத் தலைவர் ரவின் விக்ரமரத்ன. , தேசிய கிரிக்கெட் மேம்பாட்டு மையத் தலைவர் கமல் தர்மசிறி மற்றும் செயற்குழு உறுப்பினர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிறுவன திட்ட செயலகத்தின் சுஜீவ கொடலியத்த ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.