ரஷ்யாவில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த கார் வெந்நீர் குழாயில் விழுந்ததில் காரில் பயணித்த இரண்டு பேர் உடல் வெந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பென்ஷா நகரில் தற்போது நிலவி வரும் குளிரை சமாளிக்க குழாய் மூலம் வீடுகளுக்கு வெந்நீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்காக  வீதிகளுக்கு  அடியில் பாரிய அளவில் குழாய்களை அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கு வெந்நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பென்ஷா நகரில் உள்ள வீதியில் இரண்டு ஆண்களுடன் பயணித்த கார் எதிர்பாராத விபத்தில் வீதியில் ஏற்பட்ட பள்ளத்துக்குள் கார் விழுந்தது. 

விழுந்த வேகத்தில்  குழாயின் அடியில் உள்ள வெந்நீர் குழாயை உடைத்து கொண்டு உள்ளே பாய்ந்தது. 

இதில் காருக்குள் இருந்த இரண்டு  பேரும் உடல் வெந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.