(எம்.மனோசித்ரா)

இலங்கையின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேச தலைவர்கள் டுவிட்டர் வலைத்தளத்தினூடாக வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் , ' இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் , இதனூடாக எதிர்காலத்தில் வலுவான பிணைப்பை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் ' குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தனது வாழ்த்து செய்தியில், ' இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன். தொடர்ந்தும் இலங்கை - நேபாளம் ஆகிய இரு நாடுகளின் உறவு வலுவடைவதோடு, தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம் ' என்று குறிப்பிட்டுள்ளார். 

இவ்விரு தலைவர்களதும் வாழ்த்து செய்திக்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளதோடு, அவர்கள் கூறியுள்ளதைப் போன்று தாமும் இரு நாடுகளுடனும் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.