கோடை கால குழந்தை பராமரிப்பு.!

Published By: Robert

30 May, 2016 | 10:52 AM
image

Displaying Child Photos.jpgDisplaying Child Photos.jpg

பதினைந்து வருடங்களுக்கு முன்பு கோடைக்காலம் என்பது வருடத்திற்கு ஒரு முறை தான். ஆனால் தற்போது சீதோசனாநிலை மாற்றத்தின் காரணமாக வருடத்தின் பாதி நாட்கள் கோடைகாலமாக இருக்கிறது அதிலும் குறிப்பாக கத்திரிவெயில் தாக்கம் அதிகமாகவே உள்ளது. எனவே இதில் இருந்து தங்கள் செல்ல குழந்தைகளைக் எவ்வாறு பேணிக் காப்பது என்று அறிந்து கொள்ளுவோம்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் குழந்தைகளை வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்து, கேரம், செஸ் போன்றவை வீட்டில் அமரச்செய்து விளையாடச் சொல்லலாம்.

வெயில் காலத்தில் குழந்தைகள் அணியும் ஆடைக்கும் முக்கியத்துவம் தந்து அரிப்பு ஏற்படுத்தாத வியர்வை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்வை தடுமத்திலிருந்து பாதுகாக்க ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்கச் செய்யலாம்.

சிறு குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் மிதமான வெந்நீரில் தலை குளிக்கச் செய்யலாம்.

நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சௌசௌ... போன்ற காய்களை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

இயற்கை நமக்கு தந்த மிகவும் அற்புதமான ஒன்று நீர்பாசனங்கள் ஆகும். அதாவது இளநீர், பதநீர், மோர், பழச்சாறு, நுங்கு போன்றவை கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மோரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும். ஏனெனில் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவை சமப்படுத்தும்.

குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைவதை எவ்வாறு கண்டறியலாம். வறண்ட சருமம், உதடுவெடிப்பு, சிறுநீர் கழிப்பது மகிக் குறைந்த அளவே காணப்படும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி ஏற்படும். இதிலிருந்து தடுக்க நாள் ஒன்றுக்கு 1லிருந்து 2 லீற்றர் தண்ணீர் அருந்தச் செய்ய வேண்டும். 

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

கோழி இறைச்சி, சிப்ஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான உணவுகள், பாண் மற்றும் சப்பாத்தி, பிஸ்கட் போன்ற மாவுப் பொருட்களையம் தவிர்க்க வேண்டும்.

செயற்கை பானங்களான பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அமிலம் மற்றும் வாயு அதிக அளவு உள்ளதால் குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இவைகளை நாம் பின்பற்றினாலே குழந்தைகளைக் வெயில் கால நோயில் இருந்து பாதுகாக்கலாம்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04