"எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்"

Published By: R. Kalaichelvan

21 Nov, 2019 | 04:40 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த கட்சி என்பதுடன், பல தலைசிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாகும்.

எனவே இக்கட்சியிலிருந்து விலகி, புதியதொரு கட்சியை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கில்லை. எக்காரணத்திற்காகவும் கட்சியிலிருந்து விலகவேண்டாம் என்றே சஜித் பிரேமதாஸவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவ்வாறு செய்வது அவருடைய தந்தையரான ரணசிங்க பிரேமதாஸவிற்கு இழைக்கின்ற துரோகமாக அமைந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் இப்போது கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்காவிட்டால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரிடும் என்று ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் காரியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டிற்காக பல்வேறு சேவைகளை முன்னெடுத்த சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதித் தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைய நேர்ந்தமை தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களும், மக்களும் மிகுந்த கவலையடைந்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் விரைவாகப் பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு நாம் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானோர் விரும்பினால் மாத்திரமே உடனடியாகப் பொதுத்தேர்தலை நடத்தமுடியும். அத்தகைய பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.

எனவே அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல்மாத நடுப்பகுதியில் அல்லது மே மாத முற்பகுதியில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெறும்.

எனின் எமக்கு இன்னமும் சுமார் 6 மாதகால அவகாசமுள்ளது. அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை சஜித் பிரேமதாஸவிற்குப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தேர்தலை எதிர்கொள்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

எமது கட்சி பல காலமாகத் தோல்வியடைந்து வருகின்றது. 4 வருடகாலத்திற்குப் பின்னர் எதிரணியினரால் எம்மைத் தோற்கடிக்க முடிந்திருக்கின்றது என்றால், மீண்டும் எதிர்வரும் 4 வருடங்களின் பின்னர் அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்.

அதனை நிச்சயம் செய்வோம். எனவே சஜித் பிரேமதாஸவிற்காக வாக்களித்தவர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களைப் பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமான வேலைத்திட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். அதனை இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் இருந்தே செயற்படுத்தி, அதில் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அடைந்து கொள்ளக்கூடிய வகையில் கட்சியை வழிநடத்துவோம்.

2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு 100 நாட்கள்வரை காணப்பட்டது.

எனினும் அத்தேர்தலில் எம்மால் 113 என்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போதை எதிரணி 95 ஆசனங்களைப் பெற்றது. எனவே இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் 6 மாதகாலம் உள்ள நிலையில் அதில் நாம் 95 ஆசனங்களைக் கைப்பற்றிக்கொண்டால் எம்மால் அரசாங்கம் அமைக்கமுடியும். எனவே மக்கள் எவ்வாறு தீர்மானம் எடுப்பார்கள் என்று முன்கூட்டியே கூறமுடியாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19