மறைந்த பிரதமர் தி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்ற வளாகத்தில் நாளை (22.11.2019) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் வைத்தியசாலையில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் தி.மு ஜெயரத்ன தனது 88 வயதில் காலமானார்.

இந்நிலையில், அவரது உடல் தற்போது கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மறைந்த முன்னாள் பிரதமரின் இறுதி சடங்குகள் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.