(செ.தேன்­மொழி)

ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­ப­க்ஷவின் வெற்­றியை அடுத்து இலங்கை வர­லாற்றில் புதிய அத்­தி­யாயம் ஒன்று எழு­தப்­பட்­டி­ருக்­கி­றது.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­களைக் காண வேண்­டிய அவ­சி­யத்தில் நாடு இருந்த போது மக்கள் சிந்­தித்து சரி­யான தீர்ப்பை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள் என்று கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான தினேஷ் குண­வர்­தன கூறினார்.

பத்­த­ர­முல்­லையிலுள்ள பொது­ஜன பெர­மு­னவின் காரி­யா­ல­யத்தில் நேற்று  நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர்  இதனைத் தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் போதும் கோத்­தபாய சிறந்த மற்றும் வினைத்­திறன் மிக்க பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். தேர்தல் ஆணைக்­கு­ழுவின் ஆணை­யையும் மீறி அர­சாங்கம் சுவ­ரொட்­டிகள், பதா­­தை­களை ஒட்­டிய போதிலும், கோத்த­பாய இவற்றைத் தவிர்க்­கு­மாறு குறிப்­பிட்டு சிறந்த அமை­தி­யான பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தார்.

இத­னாலே எமது வேட்­பா­ள­ருக்கு எதி­ராக ஆளும்­ த­ரப்­பினர் பொய் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் வதந்­தி­களைப் பரப்­பி­ய­போதும் மக்கள் அவற்றைக் கருத்திற் கொள்­ளாமல் அவரை ஆத­ரித்­துள்­ளனர். தேர்தல் வெற்­றியின் பின்னர் அவர் பத­வி­யேற்­றதை அடுத்து அவர் கருத்துத் தெரிவித்த போது தமக்கு ஆத­ர­வாக மற்றும் எதி­ராக வாக்­க­ளித்த அனை­வ­ரையும் தம்­முடன் இணைந்து செயற்­ப­டு­மாறு குறிப்­பிட்டு அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்தார். ஒரு சிறந்த தலை­வ­ருக்­கு­ரிய விசேட தன்­மை­யா­கவே நாம் இதனைக் கரு­து­கின்றோம்.

டலஸ் அழ­கப்­பெ­ரும

இதன்­போது கருத்துத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும கூறி­ய­தா­வது :

தேர்தல் முறை­கே­டுகள் குறை­வாக பதி­வு­ செய்­யப்­பட்ட தேர்­த­லாக இந்த ஜ­னா­தி­பதித் தேர்தல் வர­லாற்று சிறப்பு பெறும். தேர்தல் முறை­கே­டு­களை இது­வ­ரையும் கட்­டுப்­ப­டுத்தி வந்­தது போல் இனி­வரும் காலங்­க­ளிலும் அதனைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக அனை­வரும் செயற்­பட வேண்டும்.

தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் போது சில அமைச்­சர்­க­ளினால் இரு ஊட­கங்­க­ளுக்கு பெரும் அச்­சு­றுத்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால் ஊட­கங்கள் அதற்கு கட்­டுப்­ப­டாமல் செயற்­பட்­டமை தொடர்பில் ஊட­கங்­களை நாம் பெரிதும் பாராட்­டு­கின்றோம். ஜனா­தி­பதித் தேர்தல் வர­லாற்றில் முதல் தட­வை­யாக அதிக வாக்­கு­களால் எமது வேட்­பா­ளரை வெற்­றி­ய­டையச் செய்­துள்­ளனர்.

எதி­ர­ணி­யினர் எமது வேட்­பா­ளரின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அதற்­காக போலி ஆவ­ணங்கள், காணொளி காட்­சி­க­ளையும் வெளி­யிட்­டனர். இம்­முறை தேர்­தலின் போது கோத்­த­பா­ய­விற்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­காக அர­சியல்வாதி­களை புறந்­தள்­ளி­விட்டு தொழிற்சங்­கங்கள், கலை­ஞர்கள், பல்­வேறு துறை ­சார்ந்­த­வர்கள் முன்­வந்­தி­ருந்­தனர்.

தேர்தல் முறை­கே­டுகள் குறை­வான தேர்­த­லான இந்தத் தேர்தல் வர­லாற்று சிறப்பு பெறும். இந்த அனைத்து வெற்­றிகளுக்கும் காரணம் எமது வேட்­பா­ளரின் சிறந்த வேலைத்­திட்­டமே ஆகும். நாம் வெற்­றியை பகிர்ந்து கொள்­வ­துடன் இதற்­கான முழு மதிப்­பையும் கோத்தாபய ராஜ­ப­க்ஷ­விற்கு கொடுக்க வேண்டும்.

இலங்கை வர­லாற்றில் மே 18ஆம் திகதி சிறப்பு பெறு­வதைப் போல் சிறந்த தலைவர் ஒருவர் நாட்டை பொறுப்­பேற்ற தினம் என்­ப­தால் நவம்பர் 18ஆம் திக­தியும் சிறப்பு பெறும்.

இவர் சுவ­ரொட்­டி கள் மற்றும் பதா­தை­களை தவிர்த்­த­மை­யா­லேயே பெரு­ம­ள­வான முறை­கே­டுகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. தேர்­தலின் பின்னர் சிற்­சில வன்­முறைச் சம்­ப­வங்கள் பதிவாகியுள்ள போதிலும் இதனை தவிர்த்துக் கொள்ளுமாறு எமது ஆதரவாளர்களிடம் கேட் டுக் கொள்கின்றோம்.

வெற்றியை எளிமையான முறையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகை யில் கொண்டாடுவோம். ஏன் நாம் எப்போதும் போல் ஒருவருக்கு ஒருவர் எதிராக செயற்பட வேண்டும்? நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றி ணைந்து ஒரே நாடு, ஒரே சட்டம் என் னும் அடிப்படையில் செயற்படுவோம் என்றார்.