வியாழக்கிரகத்தின் 79 சந்திரன்களில் ஒன்றான யூரோப்பாவின் பனியாலான மேற்பரப்பின் மேலாக இறகுகள் போன்ற வடிவத்தில் நீராவி உள்ளதாக அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த சந்திரனின் மேற்பரப்பிலிருந்து வெளி ப்பட்ட அகச் சிவப்பு ஒளியின் அலை நீள த்தை அடிப்படையாக வைத்தே இந்தக் கண்டு பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தச் சந்திரனில் ஒரு செக்கனுக்கு 5,000 இறாத்தலுக்கு அதிகமான அளவு வீதம் நீர் வெளிப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது ஒலிம்பிக் விளையாட்டுகள் இடம்பெறும் நீச்சல் தடாகமொன்றை ஒரு சில நிமிடங்களில் நிரப்பப் போதுமானது எனவும் நாசா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூமியிலுள்ள சமுத்திரங்களில் ஒன்றை விட வும் இரு மடங்கு பெரிய சமுத்திரம் யூரோப்பாவின் பனிப் படலத்திற்கு கீழ் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் ஏற்கனவே வாதிட்டு வருகின்ற நிலையில் அவர்களது அந்தக் கோட்பாட்டை மீள வலியுறுத்தும் வகையில் மேற்படி ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.