திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் நேற்றிரவு காலமானார் .

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்து, திருப்பத்தூரான் என்ற பெயரில் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதத் தொடங்கினார். பின்னர் தனது பெயரை காளிதாசன் என்று மாற்றிவைத்துக் கொண்டு இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதினார்.  

தேவாவின் இசையில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் பாடல்களை இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து தேவா இசையமைத்த ஆத்தா உன் கோயிலிலே, தூது போ செல்லக்கிளியே, ஒயிலாட்டம், மதுமதி , ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானார். தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இவர் சில ஆண்டுகாலமாக நோய்வாய் பட்டிருந்தார். தஞ்சை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

தகவல் : சென்னை அலுவலகம்