ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இந்த பொது மக்கள் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பு வொக்ஷால் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.