ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர், பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.