வெளி நாடு­களில்  இருந்து வந்து எமது வெற்­றியில் பங்­க­ளிப்பு செய்த அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும்   விசேட நன்­றியை தெரி­விக்­கின்றேன் என்று  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெ ரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் நாமல் எம்.பி. தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதி­வி­லேயே  அவர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

“நாடு­களில்  இருந்து இலங்கை வந்து  ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­க­ளித்த அனை­வ­ருக்கும் எமது விசேட நன்­றியை தெரி­விக்­கின்றேன்.   உங்கள் அனை­வ­ரது  ஒவ்­வொரு வாக்­கு­ம் எமது வர­லாற்று ரீதி­யான வெற்­றியில் பங்­க­ளிப்பு செய்­துள்­ளது” என்று நாமல் ராஜ­பக் ஷ எம்.பி. தனது டுவிட்டர் தளத்தில் பதி­விட்­டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன சார்பில் போட்­டி­யிட்ட கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமோக வெற்­றி­யீட்­டி­யிருந்தார்.  இந்தத் தேர்­தலில் வெளிநா­டு­களில் பணி­பு­ரியும்  அதிகமான இலங்கையர்கள் வருகை தந்து வாக்களித்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.