நல்­லாட்சி அரசின் ஊழல்கள் குறித்­து ­வி­சா­ரித்து நட­வ­டிக்கை எடுக்கப்படும் - விமல்

Published By: R. Kalaichelvan

21 Nov, 2019 | 12:46 PM
image

(செ.தேன்­மொழி)

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்டனை வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்த தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச ஜனா­தி­பதி கோத்தாபய ராஜபக்ஷ ஊழல் மோச­டிகள் இன்றி நாட்டை முன்­னேற்­றுவார் என்றும் கூறி­யுள்ளார்.

பத்­த­ர­முல்ல நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள பொது­ஜன பெரமுனவின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

நாட்டில் இது­வ­ரை­யிலும் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­களை விட இவர் மிகவும் மாறு­பட்ட பண்­பு­களை கொண்­ட­வ­ராக காணப்­ப­டு­கின்றார். வழ­மை­யாக புதிய ஜனா­தி­ப­திக்­கான வர­வேற்பு நிகழ்­வுகள் இடம்­பெறும் போது மூடப்­படும் காலி­மு­கத்­திடல் இந்தத் ­த­டவை மூடப்­ப­ட­வில்லை. நிகழ்­வுகள் இடம்­பெ­ற்றதுடன் போக்­கு­வ­ரத்தும் வழ­மையைப் போன்று  காணப்­பட்­டது.

சிறந்த தலை­மைத்­துவ பண்­பு­களைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ ஊழல் மோச­டி­க­ளின்றி நாட்டை சிறப்­பாக ஆட்­சி­ செய்வார்.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததை அடுத்து அதற்கு முன்­னைய அர­சாங்­கத்தின் மீது பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வழக்­கு­க­ளையும் தொடுத்­தி­ருந்­தது. ஆனால் அந்த குற்­றச்­சாட்­டுகள் ஏதா­வது தற்­போது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளதா? இல்லை தானே.

இந்த அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட மோச­டிகள் தொடர்பில் எதிர்­வரும் காலங்­களில் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து குற்­ற­வா­ளிகள் அனை­வ­ருக்கும் தண்­டனை வழங்­கு­வ­துடன், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை வகித்த சில­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்தி அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­க­ள் முன்­னெ­டுக்­கப்­படும்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பிலும் இத­னுடன் சம்­பந்­தப்­பட்டு வெளி­நாட்­டுக்கு தப்பிச் சென்று வாழ்­ப­வர்கள் தொடர்­பிலும் உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும். நல்­லாட்சி அர­சாங்­கத்தால் உரு­வாக்­கப்­பட்ட ஊழல் தடுப்பு பிரிவு தொடர்­பிலும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.எப்­போதும் போன்று இலங்­கையை கறுப்பு கண்­ணாடி அணிந்து பார்க்­காமல்,  இலங்கை தொடர்­பான நம்­ப­கத்­தன்­மையை மதிக்கும் வகை­யி­லான செய்­தி­களை மாத்­திரம் வெளி­யி­டு­மாறும் பீ.பீ.சி க்கு தெரி­விக்­கின்றோம்.

இட­து­சாரி ஜன­நா­யக முன்­னணியின் தலைவர் வாசு­தேவ நாணயக்­கார  குறிப்­பி­டு­கையில்,  

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து மக்கள் விடு­தலை முன்­னணி செய்து கொண்ட ஒப்­பந்­தத்­துக்கு மக்கள் அவர்­களின் முடி­வு­களை வழங்­கி­யுள்­ளனர்.

அனைத்து தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் இணைத்துக் கொண்டு சிங்­க­ள­வர்கள் அனை­வரும் ஒரு­மித்த நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

எதிர்த்­த­ரப்­பினர் சட்­டத்தை மீறி சுவ­ரொட்­டி­களை ஒட்டும் போது எமது ஆத­ர­வா­ளர்­களும் அதனை செயற்­ப­டுத்த முயற்­சித்­தனர். ஆனால் எமது வேட்­பாளர் நாம் அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க கூடாது என்று  ஒவ்­வொ­ரு­வ­ரையும் அறி­வு­றுத்­தினார்.

நாங்கள் முன்­மா­தி­ரி­யாக எமது பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்தோம். எனது குர­லைப்­போன்று குரலை பதிவு செய்து மோச­டியில் ஈடு­பட்­டனர். தற்­போது தேர்தல் முடி­வுகள் வெளி­வந்­துள்ள நிலையில் மக்­களால் எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டை அவர்­களால் உணரக் கூடி­ய­தாக இருக்கும்.

ஏகா­தி­­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கு சஜித் பிரே­ம­தாச போன்ற ஒரு தலைவர் தேவைப்­பட்டார். அவ­ரிடம் தமது ஒப்­பந்­தங்­களை கைச்­சாத்­தி­டு­வதே அவர்­களின் திட்­ட­மாக இருந்­தது.

இந்த நிலை­மையில் மாற்­றத்தை உணர்ந்­த­வுடன் நாட்டில் பிரிவினையை ஏற்­ப­டுத்தி வாக்­கு­களை பெற முயற்­சித்­தனர். சில தமிழ், முஸ்லிம் மக்கள் எமது வேட்பாளரின் வெற்றிக்காக வாக்களித்துள்ளனர்.

உண்மையாகவே தேசத்தின் மீது பற்றுள்ளவர்களே இவ்வாறு வாக்களித்துள்ளனர். இவர்களை நாம் நினைவில் கொள்வதுடன், பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஏகாதிபத்திய வாதிகளுக்கு எதிராக நாம் எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56