(செ.தேன்மொழி)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எடுத்த முடிவினால் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுக்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தேர்தல் பிரசாரங்கள் எவ்வாறு இடம்பெற்றாலும் மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
எமது கட்சியின் தீர்மானத்தை கருத்திற் கொள்ளாது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கி அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்.
இதனால் என்ன பயன் கிடைத்தது? எமது கட்சி ஆதரவாளர்களுக்கே தற்போது தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அவர் தேர்தல் முடிவுற்றதை அடுத்து வெளிநாடு சென்று விடுவார்.
ஆனால் எமது ஆதரவாளர்கள் இங்குதான் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் கோத்தாபயவை போன்ற சிறந்த தலைவரை ஆட்சியில் அமர்த்தவே விரும்பியிருந்தனர்.
சந்திரிகாவின் இந்த செயற்பாட்டால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? அவரது ஆசனமான அத்தனகல்லவிலும் எமது வேட்பாளர் கோத்தபாயவே வெற்றிக் கொண்டார்.
தேர்தல் பிரசாரங்களின் போது யார் எவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்தாலும் மக்கள் தெளிவாகவே இருந்துள்ளனர். அதனாலேயே மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர்.தெற்கில் ஊடகங்கள் கவனத்திற் கொள்ளாத விடயங்களை க்கூட வடக்கு ஊடகங்கள் பிரதான செய்திகளாக வெளியிட்டிருந்தன. அதனால் வடக்கு, கிழக்கு மக்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டன.
இதுவரை காலமும் இருந்த அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இம்முறை தலைவரொருவர் எமக்கு கிடைத்துள்ளார். எந்த அரசியல் கட்சிகளிலும் பங்கு கொள்ளாத ஒருவர் தற்போது நாட்டுக்கு தலைவராக கிடைக்கப் பெற்றுள்ளார். அவரது வருங்கால செயற்பாடுகளுக்கு கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்புடன் செயற்படுவோம்.
இதன்போது கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெலஉறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன்பில கூறியதாவது, எமது வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அரசாங்கத்தினர் 17 பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடுத்தனர்.
இவர் இலங்கை பிரஜை இல்லை என்றும் இன்னும் அமெரிக்காவின் குடிமகன் எனவும் எடுத்துக் காட்டுவதற்காக முயற்சித்தனர். வெள்ளை வேனில் இளைஞர்களை கடத்தி கொலை செய்ததாகவும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களும் இவராலே திட்டமிடப்பட்டதாகவும் எடுத்துக்காட்ட முயற்சித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்த போது நாம் தெற்கில் உள்ள மக்களை அது தொடர்பில் தெளிவுபடுத்தினோம். ஆனால் வடக்கு மக்களை எம்மால் தெளிவுப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்பட்டன.
அவர்களுக்கு எமது கருத்துகளை நேரடியாக கொண்டு செல்வதற்கான வளம் எங்களிடம் இருக்கவில்லை. வடக்கின் அரசியல்வாதிகள் 13 கோரிக்கைகளை முன்வைத்தனர். கோத்தபாய தாம் தோல்வி அடைந்தாலும் தம்மால் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.
நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்ததன் காரணமாகவே கோத்தாபயவை மக்கள் தெரிவு செய்துள்ளனர்.
வாலால் சிங்கத்தை ஆட்டிவித்த காலம் மாறி தற்போது சிங்கத்தால் வாலை ஆட்டிவைக்கும் காலம் உதயமாகியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியினரும் தற்போது பின்னடைவையே கண்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கமைய பார்க்கும் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் இவர்களால் ஒரு உறுப்புரிமையை மட்டுமே பாதுகாத்துக் கொள்ள கூடியதாக இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தங்களுக்கு உதவியமையினாலேயே மக்கள் அவர்களுக்கு இவ்வாறான பதிலடியை கொடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM