பதுளை பாரதி தமிழ் வித்தியாலய அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரின் அலுவலக அறைகள் இனத்தெரியாதவர்களினால் நேற்று இரவு (20) உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயம் வித்தியாலய அதிபர் கந்தசாமி ரவிக்குமாருக்கு தெரியவர, அவர் உடனடியாக விரைந்து நிலைமையை அவதானித்து கல்விப்பணிப்பாளர் மற்றும் பதுளைப் பொலிசார் ஆகியோருக்கு முறைப்பாடுகளைச் செய்துள்ளார்.

இம்முறைப்பாடுகளையடுத்து கல்விப்பணிப்பாளர் மற்றும் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வித்தியாலய அதிபர் மற்றும் பிரதி அதிபர் அலுவலக அறைக் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் அவ் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் ஏதும் திருடப்பட்டுள்ளன வாவெனத்  பரிசீலனை செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் இனவாத செயற்பாடுகளாக இருக்குலாமென சந்தேகிக்கும் நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.