Published by R. Kalaichelvan on 2019-11-21 12:28:46
மக்களின் மனங்கவர்ந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தாபய ராஜபக் ஷவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த வெதுருவே உப்பாலி தேரர் புதிய ஜனாதிபதி மக்களுக்கு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை வழங்குவார் என தெரிவித்தார்.

கொழும்பு சோலிஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 16ஆம் திகதி எந்தவொரு வன்முறைகளும் இன்றி அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தேறியது. நாட்டிற்கு சிறந்த ஜனநாயக ஆட்சியை மேற்கொள்ள கூடிய சிறந்த ஜனாதிபதியையே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்ந்தெடுத்துள்ளனர். நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் எவ்வாறான நிலைமை காணப்பட்டாலும் இனிமேல் ஜனநாயகம், சகோதரத்துவத்துடன் கூடிய ஆட்சியை மக்களுடன் இணைந்து கோத்தபாய நடத்திச் செல்வார் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் இதனை கருத்தில் கொண்டே தங்களின் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க பல அரசியல் களங்களை சந்தித்தவர். அரசியல் அறிவினை உடையவர் அதனால் தற்போது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக முடிவெடுத்துள்ளார். நாட்டிற்கு தேவையான தருணத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். நாட்டு மக்களில் நூறில் 40 வீதத்துக்கு அதிகமான மக்களின் விருப்ப தெரிவினை கொண்டிருந்தார் சஜித் பிரேமதாச. இலங்கையின் அரசியலில் முன்னோடி கட்சியாக எவ்வேளையிலும் ஐக்கிய தேசிய கட்சி விளங்கும்.
வெற்றியை தனதாக்கி 69 இலட்சத்துக்கும் அதிக மான மக்களின் மனங்கவர்ந்த ஜனாதிபதியா கியுள்ள கோத்தாபய மக்களுக்கு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை வழங்குவார். நாட்டின் அணைத்து மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்டி மக்கள் அனைவரையும் பாதுகாக்க வழிசெய்வார்.